விமலாதாஸ் கவிதைகள்


விமலாதாஸ்

இதிக்கடன்
தலைசாய்த்து
நித்தமும் உறங்கிய
அகனற் உன் மார்பின்
எலும்புகளை ஒன்றுவிடாமல்
பொறுக்கி
என் மடிமீது வைத்து
நீயிருந்த ஆசனத்தே நானமர்ந்தேன்

பயணித்த வழியெல்லாம்
நம் வாழ்வின் வசந்தங்களையும் கனவுகளையும்
வழித்தெடுத்து
சேர்த்துக் கொட்டினேன்
நம் கட்டிலில்
0

இனி

அச்சம் இல்லை
அவலம் இல்லை
அந்தரித்தல் இல்லை
மூச்சுத்திணறுதல் இல்லை
முனகும் ஒலியின் வாதை இல்லை

தூக்கத்தில் விழிக்கும் தேவை இருக்காது
கசியும் கண்களில் ஈரம் இருக்காது
கரைந்தாலும் கேட்க ஆளிருக்காது
அழைக்கும் குரலுக்கு
அடுத்தகுரல் இருக்காது

காலையில் விழித்தால் காலியான அறை
வீட்டை நிறைத்த வெறுமை
அலையடங்கிய கடலாயானது மனது
0
முழு உள்ளடக்கம்

0 comments:

Post a Comment