கோகுலராகவன்
ஒரு இழிவுப் புள்ளியில்
என் பறவைகள்
தம் சிறகுகளை இழந்தன
ஒருபாடல் தன் மெட்டை இழந்தது
குரல்கட்டிக் கிடக்கின்றான்
ஒரு கூத்தாடி
ஆயிரம் பறவைகள் பயம் கொண்டு
எழுந்தோடிச் சகதியில் மாண்டன
எனது
வஸீகரப் புன்னகையை
இக் கணத்தினில் இழந்தேன்
இடித்து விட்டு வெறும்
குலுக்கலுடன் போகின்றன
நீண்ட பாரவ+ர்திகள்
தாமரைக் குளத்தருகல்
என் வீட்டுக் கணற்றடியில்
பற்றி எரிகின்றன
அழகிய சிட்டுக்குருவிகளின் கூடுகள்
வெறும் விழி மெல்லும்
பழுதாய்ப் போன
கனவுகளின் ரீங்காரம்
ஒரு மரங்கொத்தி போல
காலங்களை நெடுகலும்
கொத்திக்கொண்டே இருக்கின்றது
முழு உள்ளடக்கம்
0 comments:
Post a Comment