கபீர் கவிதைகள்


ஆங்கலம் வழி தமிழில்: திசையுக்கரசிங்கன்

மாயையும் யதார்த்தமும்

எது பார்க்கப்பட்டதோ அது உண்மையில்லை
எதுவோ அது சொல்லப்படவில்லை
நம்பிக்கை வாhத்தைகள் இன்றிப் புரிவதும்
பார்க்கப்படாமல் வருவதுமாகும்
புறக்கணிப்பு நோக்கிய அறிவுடைப்பட்டுணர்வின் முழுமை
ஆனால், எவ்வளவு அதிசயம்
வடிவமற்ற கடவுளை வணங்குவர் சிலர்
அவரது பல்வேறு வடிவங்களை வழிபடுவர் சிலர்
எல்லாவித கபிதங்களுக்கும் அப்பால் உள்ளார் அவர்
இசையை எழுதமுடியாது என
அறிபவன் மட்டுமே அறிவான்
அதற்கப்புறம் ஸ்வரத்தினை மட்டும்
கபீர் கூறுகிறான் விழிப்பு ஒனறு; மட்டுமே
மாயையைத் தாண்டுமேன்
0

என் தேகத்தினுள் நிலவு

என் தேகத்தினுள் பிரகாசிக்கிறது நிலவு
என் குருட்டு விழிகளோ காண்பதில்லை
என்னுள்ளே நிலவாதலால் சூரியனும்....
முடிவின்மையின் தடையற்ற பறை ஒலிக்கிறது என்னுள்
ஆனால், என் செவிட்டுக் காதுகளோ கேட்பதில்லை

நான் எனது என்பதற்காய் கூக்குரலிடுகிறான் நெடுங்காலமாய் மனிதன்
அவனது காரியங்களோ எதுவும் அற்றவை
எப்போது நான், எனது மீதான பிடிப்பு இறக்கிறதோ
அப்போது நிறைவேறும் கடவுளின் காரியம்
அறிவெய்தல் என்பதற்கப்பால்
காரிய இலக்கென வேறில்லை
எப்போது நிகழ்கிறதோ அது
அப்போது போய்விடும் காரியமாற்றலும்
பூ கனிக்காக மலர்கிறது கனியெப்போது வருகின்றதோ போய்விடுகின்றது
பூ அப்போது
மானுள் உள்ளது கஸ்தூரி, தன்னுள் ஆராயாமல் புற்களை நாடியலைகின்றது அது
0
முழு உள்ளடக்கம்

நச்சுமரம்

ஆங்கலமூலம் - வில்லியம் பிளேக்
தமிழில் - க.சத்தியதாசன்

நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன்
அதை வெளிக்காட்டினேன் அது முடிவுக்கு வந்தது.
நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை
மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது.

எனது அச்சத்தால் அதற்கு கண்ணீரைக் கொண்டு
இரவுபகலாய் நீர் ஊற்றினேன்
வஞ்சக தந்திரங்களாலும் புன்னகைகளாலும்
ஒளி தந்தேன்

பளபளக்கும் கனி ஒன்i
அது ஏந்தும் காலம் வரை
இரவு பகலாய் அது வளர்ந்தது
ஒளிமிகுந்த அக்கனியை
எதிரிகண்டான்
அது என்னுடையதென
அறிந்து கொண்டான்

இரவு திரையிட்டிருந்த
நாளொன்றில் என் தோட்டத்தில்
திருட்டு நிகழ்ந்தது.
காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன்
அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த
என் எதிரியை
0
முழு உள்ளடக்கம்

புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம்

The rapids of a Great rever
பென்குயின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை
தொகுப்பு- லஷ்மி ஹோம்ஸ்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி, கே. ஸ்ரீலதா
விலை-499.00 இந்திய ரூபாய்
ISBN- 978-0-67-008281-0

..............................................................

பாக்கு

ண்மைய ஆண்டுகளில் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழியாக்குகைகள் பலவும் வந்துகொண்டுள்ளன. இவற்றுட் குறிப்பிடத்தக்கனவான செல்வா கனகநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட Lutesong and Lament(2001) என்னும் ஈழத்தமிழர் சிறுகதை மற்றும் கவிதைகளின் தொகுப்பு ,கதாவினால் வெளியிடப்பட்ட முனைவர் கே. எஸ். சுப்பிரமணியத்தாற் தொகுக்கப்பட்ட Tamil new poetry (2005) ஆகியவற்றின் தொடர்ச்சியாகஇ உலகப் புகழ் பெற்ற பென்குயின் வெளியீட்டகம் இந்த வருடத்தின் முதல் மாதங்களில் (ஏப்பிரல் 2009) The rapids of a Great river எனும் பெயரிலான இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்க் கவிதையின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்க் கவிதையின் நெடுமரபு பற்றிய நீண்ட முன்னுரைப் பகுதியோடு காணப்படும் இந்த நெடுந்தொகை இரண்டு பகுதிகளையுடையது. முதற் பகுதி சங்கக்கவிதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சைவத்திமுறைகள், சேக்கிழார், நம்மாழ்வார், ஆண்டாள், கம்பர், சித்தர் பாடல்கள், தாயுமானவர், திரிகூடராசப்பக்கவிராஜர், கோபாலகிருஷ்ணபாரதி என்போரது எழுத்துக்களையுடையது. இரண்டாம் பகுதியில் பாரதி முதல் குட்டிரேவதி வரையான 43 கவிஞர்களது தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளையுடையது.

இத் தெர்குப்பில் பிரமள், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், எம். ஏ நுஃமான், சங்கரி, சு.வில்வரத்தினம், கி.பி அரவிந்தன், திருமாவளவன், ஊர்வசி, சோலைக்கிளி, செழியன், சேரன், மைத்திரேயி, பாலசூரியன், அவ்வை, சிவரமணி, பா.அகிலன் முதலான பதினேமு ஈழத்துக் கவிஞர்களது கவிதைகளின் மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்ப்படைப்புலகை இத்தொகுப்புக்கள் பரந்தவொரு வாசக வட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய பணியினை ஆற்றியுள்ளன. என்ற போதும் புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம் இன்னும் தமிழின் முக்கிய குரல்களைப் பதிவு செய்யாது விட்டுள்ளதெனவே தோன்றுகிறது.
0
முழு உள்ளடக்கம்

இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

சத்தியபாலன் கவிதைகள்

நிலான்

வெளிப்பாட்டு முறையில் நவீனத்துவமிக்க இன்றைய கவிதைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதையின் புரியாமை அல்லது இருண்மைத் தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும். சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப்பின் முழுமையினை எட்ட முடியும்.
தமிழிலுள்ள பழமொழிகளும் மரபுத்தொடர்களும் அவற்றின் நேரடியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுபவையல்ல. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற பழமொழி அடம்பன் கொடியயைப் பற்றியது மட்டுமல்ல. அது தரும் நேரடியான அர்த்ததிற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகின்றது. கவிதையில் சொற்கள் தாம் கொண்டிருக்கும் நியமமான கருத்திற்கப்பாலும் விரிந்;த பொருளைத் தருகின்றன. வாசிப்பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன.
ந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக் கொண்டவை. அவரது “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்”; என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதைகள்;இ கட்டுரைகள்;இ பத்திகள்;இ மொழிபெயர்ப்புக்கள் என பலதிற ஆளுமை கொண்ட படைப்பாளி. வலுமிக்க சொல்லாட்சியினாலும் சொல்லல் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலியைப் பேசுகின்றது. பல கவிதைகள் மென்னுணர்வின் முகங்களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை.
காலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அதனோடு இயைந்த எல்லாவற்றையும் தன்னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களிலிருந்தும் கவிதைகளைத் தருகின்றார்
தன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள்ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலிகளுடன் திரும்புகின்றார். போலிகளை நிஜமென நம்பி ஏமாறுகையில்இ உறவு பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறுகையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித உரையாடல்கள்இ புறக்கணிப்புக்கள்இ மீளவியலாத போரும் அது தந்த வலிகளும்இ இழப்புக்களும்இ அலைச்சல்களும்இ எதையும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவித புனைவு விம்பங்களின் பதிவாக சத்தியபாலனின் கவிதைகளுள்ளன.
சத்தியபாலனின் கவிதைகளில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல்லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களைக் ஏற்படுத்துபவை.அவர் சம காலத்தின் துயர்மிகுந்த பயணியாக இருக்கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின் மொழி அலைதலின் மொழியாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளின் வெப்பத்தில் அவரின் மனம் உருகுகின்றது. சமகால வாழ்வும் அதையொட்டிய துயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங்களும் விலக்கவியலா இருளாய்ப் படிந்துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. “காவல்இ கூத்துஇ இன்னுமொரு நாள்இ இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த காலைப் பொழுது பற்றி” போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப்புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில்த் தொனிக்கும் துயரம் நிழலாக தொடர்ந்து கொண்டிருப்பவை.
“வந்த காரியத்தை
துரிதமாய் முடித்து
பாதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன்
வீட்டையொரு காவலென நம்பி” (காவல்)

“குளித்துப் புத்தாடை அணிந்து
போய்க் கொண்டிருந்தோரின்
கவனத்துக்கு தப்பிய கால் விரல்
இறைகளுக்குள்
உலர்ந்து போயிருந்தது
இரத்தம்” (கூத்து)

“மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
பறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை என பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று” (இன்னுமொரு நாள்)

“இன்னுமொரு நாள்” என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள் அஸ்வகோஸின் “வனத்தின் அழைப்பு” தொகுப்பிலுள்ள ‘‘இருள்” என்னும் கவிதையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வகோஸ் இயல்பு குலைந்த காலத்தை
“கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன” என எழுதுகின்றார்.

இருவருமே இரத்தமும் நிணமும் மணக்கும் காலத்தின் கவிஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்த தன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவமும் கவிதையில் இ;வ் வரிகள் பெறும் பொருள் சார்ந்தஇ இடம் சார்ந்த முக்கியத்துவங்களும் வாசக மனதுக்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.
சத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங்களைத் தரிசிக்க முடிகின்றது. அவர் காட்டும் அழகியல் சொற்களின் மேல் வலிந்து பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக்கான இயல்பை மேலும் வலிமையாக்கும் முறைமை கொண்டது. ஆழகிய மனத்தின் ஒருமை குலையாத படிமப் பாங்கான தன்மை கொண்டவை. இவ்வகைக் கவிதைளில் “காடுஇ தன்னுலகு” போன்றவை முக்கியமானவை.
“பரிதி புகாத
தடிப்பினை ஊடறுத்து
அங்கங்குள்ள
இடைவெளியூடாய்
நுழையும் ஓளி விரல்கள்
பொட்டிடும் நிலத்துக்கு” (காடு)

காட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை “பரிதி புகாத தடிப்பு” எனக் காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைகளினூடு விழுந்து ஒளிரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ்வளிப்பன. “தன்னுலகு” கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொருளாழமும் படிமச் செறிவும் கொண்டது.
“தொட்டி விளிம்பு வரை நிரம்பி
ததும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறி ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
………………………………
……………………………
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிலவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்”

மேற்பார்வைக்கு தொட்டி நீர் வெப்பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போலிருந்தாலும்இ பிறரின் உன்னதத்திற்காய் தன்னையறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன்மையைக் கவிதையுணர்த்துகின்றது.
சத்தியபாலன் வாழ்க்கையை அகவெளியின் பரப்பில் காண்கின்றார். தான் கைவிடப் படும் போதும் புறக்கணக்கப்படும் போதும் ஆதரவாகத் தோள் அணைக்கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற்றங்களை கவிதைகளாக்குகின்றார்.
“திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுக்கள்
கரைந்து போயின
உள்ளீடு நாவைத் தொட்டு தன் மெய்ச்சுவை
சொல்லிற்று
எழுந்த குமட்டலில் …எதிரே
நிஜத்தின் குரூர முகம்
பழைய பசுங்கனவு சோப்பு நுரைக்
குமிழியாய்
காற்றில் மெல்ல மிதந்து போயிற்று” (தரிசனம்)

கனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ்வில்இ உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிடுபவை. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதுகின்றார்.

நம்பிக்கைகளைச் சில தடவைகள் தந்துவிடுகிற சத்தியபாலன் பல தடவைகளும் நம்பிக்கையீனங்களால் அல்லாடுகின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சமகாலம். எல்லா நம்பிக்கைகளும் உடைந்து சிதறிய பின்னர். ஏதைத்தான் பேசுவது? ஆற்றாமைகளை அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்திருக்கிறது. சக மனிதனின் துயரத்துக்காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் கவிஞனின் குரலும் விம்மலும் விசும்பலுமாகத்தான்; வெளிப்படுகின்றது. தன்கே உரியதான மொழியில் சத்தியபாலன் அரசியலைப் பேசுகின்றார்.

“சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில….
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ் சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்றியோராவது தடவையும்” (அர்த்தம்)

இந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரி முறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட இனத்தின் அரசியல் இயலாமையின் வலியையும்இ துயரையும் வெளிப்படுத்துகின்றது.

சத்தியபாலனின் கவிதை வெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் “நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும்” என்னும் கவிதையிருக்கின்றது. புதியதான புரிதலை இக்கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாக பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படுகின்றான்.

“சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன்
கல்லில் சமைந்த
முகத்தின் சலனங்கள்
வாசிப்போரற்று
வெறித்தே கிடக்கும்

வாழ்திருந்த காலத்தே
அழுந்த எழுதப்பட்ட
அவனது இருப்பு
இன்று வெறும் நினைவின் சுவடுகளாய்”;

எவராலும் கண்டு கொள்ளப்படாது. அகதி முகாங்களுக்குள்ளும் வதை முகாங்களுக்குள்ளும் அடைபட்டவர்களாய் சராசரி வாழ்வு மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின் துயத்தின் மொத்த உருவாக உறைந்த மனிதனை கவிதையில் காணமுடிகின்றது.

பலமான மொழிப் பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற் சேர்க்கையுடன் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. தானே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என சத்தியபாலன் நினைக்கின்றார். இது வாகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்கு தடையாக அமையக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன. இதனையே பின்னுரையில் பா.அகிலன் “பல இடங்களில் மௌனத்தின் பாதாளங்களைச் சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்” என்கின்றார்.

“கண்ணே உறங்கு” என்ற கவிதை நேரடித்தன்மை கொண்டதோடு. கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.

“புன்னகையின் நேசம் மெய்
உபசரிப்பின் பரிவு மெய்
பற்றிக் கொள்ளும் கையின் இறுக்கம்
உதவ முன் வரும் மனசின் தாராளம்
தலை சாய்க்கும் மடியின் இதம்
எல்லாம் உண்மை
நம்பு நம்பு”

இவ் வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின்றதே தவிர புதியதான வாசிப்பு அனுபவத்தை தருவதாக அமையவில்லை. சில கவிதைகளில் சொற்களை தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத்துப் போடுகின்றார். சொற்களுக்கிடையிலான வெளி கூடும் போது வாசிப்பு மனநிலையும் குலைந்துபோகிறது. சில வேளைகளில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. “காணல்” என்ற கவிதை முழுமையும் இவ்வகையில் அமைந்துள்ளது.

சத்தியபாலனின் “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்ற இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறையிலும் பொருளாழத்திலும் கணிப்பிற்குரியதாக இருப்பதுடன். சமகாலத்தின் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கின்றது.
0
முழு உள்ளடக்கம்

உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

ஜெயமோகன்

உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்
தாணு பிச்சையா திணை வெளியீட்டகம்.
23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில், குமரிமாவட்டம். 629001

“அறிவியல்புனைகதைகள் அறிவியலின் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும் அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் “இதெல்லாம் அறிவியல், சும்மா இரு என்று அதட்டும்.
கொஞ்சநாள் கழித்;து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வுரலாற்றுத் தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தைக் கேள்விகேட்டால் வரலாறு என்பார் என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது. இவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தைக் கற்பனை செய்கிறார்களா? இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்?
அதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச் சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளைப் பற்றி பேசும் போது கி.ராஜநாராயணன் தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக் கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத் தகவல்கள்தான் அவரது இலக்கயத்தின் தனிச்சிறப்பு என்றார். ஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. ஏதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான் தகவல்கள் இலக்கயத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா? ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத் தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத் தகவல்கள் ஆகின்றன?
எனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக் கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல் என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன?
முதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அhத்தத்தில் குயீடாக நிற்கும் போது மட்டுமே. அது இலக்கயத்தில் இயல்பாக இடம் பெறுகிறது.
ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார் பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குயீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறியீடுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை அது உருவாக்கிக் கொண்டு அதனூடாகப் பேசுகிறது.
இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குயீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்தறிங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலையம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாகிறது.
அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம். இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொண்டால் அது அவியல்புனைகதை. வுரலாற்றில் இருந்து எடுத்துக்கொண்டால் அது வரலாற்று ப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.
இவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச் சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயற்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தைப் புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கயத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே.
சங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் எனற் தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சத்திரங்கள் தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என் பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.
தமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக் கணித்து தன்னை தூய அகத்தின் குரலாக முன் வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக் கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் எனற் அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது.
ஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக் கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இ;யற்கையின் பரவசம் நோக்கத் திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுநத் நாகராஜன்.
இன்றும் இந்நிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிக எளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக் கொண்ட அந்த பறவை வண்ணத்துப் ப+ச்சி போன்ற சில கவியுருவகங்கள்.
இன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்ப+ட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளைத் திந்துவிடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனித் தொழிலாளி உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டுவந்து சேர்க்கட்டும்
சமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைததொகுதி கண்ணுக்குப்பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. போற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகு சேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது. அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்.
ஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அப+ர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.

மினுக்கம்

குச்சியைப்பிடிது;து
எழுதத்தெரியாத பிராயத்தில்
ஊதுகுழலையும்
உலைக்குறடையும்
பற்றிப்பிடிக்கவைத்த தாத்தா
காய்ச்சவும்
உருக்கவும்
மின்னூதவும் என
பொன்னைப்பழக்கியதும்
தேடத்தொடங்கிற்று
காணும் யாவினுள்ளும்
மினுக்கத்தை

என்று தன்னைப் பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப் புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளங்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.

கங்கனுள் கசடறுத்து
சுழன்றுருகும் பொன்னென
மினுங்கும் இந்த வேனற்பொழுது

என மிக இயல்பாக அந்தத் தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி, உலோகமொழி எனறு; இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.

உலோக மொழி

வெற்றிலையைக் குதப்பியபடியே
வினைபுரியும் பொன்தச்சனின்
நீட்டிய கரத்தின்
சமிக்ஞை புரியாமல்
சுத்தியல் சாமணம்
படிச்செப்பு என
எதையெதையோ
எடுததுக் கொடுத்து
தடுமாறிக் கொண்டிருந்த
காலம்
கனல் பொருதும்
பெரும்பகல்கள் பல கடந்து
எடுது;துத் தந்ததிதை

என்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்தப் பெரும் தச்சனுக்கு எடுத்துக் கொடுத்து எடுத்துக் கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லோருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.
நகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அப+ர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. முழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்துவிடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்

ஒடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப்போலுள்ள
மழைத்துளிகளை
இந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையைத் தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அப+ர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது.
இயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணததை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.
0
முழு உள்ளடக்கம்

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்

மிகச்சுருக்கமாக இலக்கியம் தொடர்பான எனது பார்வையை நிர்ணயத்துக் கொள்ள விரும்புகின்றேன். கலைகள் தமக்கான ஒரு படைப்புடலை உடையனவென்ற வகையில், சொற்களால் முடையப்பட்ட ஒரு படைப்புடலில் அல்லது சொல்லுடலில் சொற்கள் பாவிப்படிந்தவொரு நிலவுருவாக, சொற்களின் நிலப்பரப்பாக இலக்கியங்கள் காணப்படுகின்றன. அடிப்படையில் சொற்களால், ஆனால் ஒரு வகையில் சொற்களுக்கப்பால் திறக்கப்பட்ட படைப்பு வெளியில் அவை வசிக்கின்றன. சோற்கள் நடமாடும் அல்லது விநியோகக்கப்படும் முறையால் அவற்றைக் கவிதை என்றும் சிறுகதை, நாவல் என்றும் அழைக்கின்றோம். சிலவேளை இந்த வடிவ நிர்ணயங்களை ஊடத்து மேவிக்கலந்த கலப்பொருமையுடைய படைப்புடலிலும் அவை வசிக்கின்றன. எல்லையற்ற திறந்த முடிவற்ற வாசித்தலுக்காக, அர்த்தங்களை இடைவிடாது உற்பத்தி செய்து, அழத்து மீள உற்பத்தி செய்தலுக்கான சாத்தியமுடைய வெளியாக இருத்த லென்பதே இலக்கியப் படைப்பொன்றின் அடிப்படையாகும்.
இன்னும் சற்றே இதனை விரித்துப் பேசலாம். இலக்கியம் நாம் பேசும் மொழியில் இருந்துதான் உருவாகின்றது எனினும் அது அந்தப்பொது மொழிக்குள் ஒரு தனி மொழியாகும் என்பதுவே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். இலக்கியம் இந்தப் பொதுமொழிப் பிராந்தியத்தினுள் அல்லது மொழிக்கிடங்கனுள் இருந்து சொற்களை எடுது;துக் கொண்டாலும் அதனை அடுக்கும் அல்லது பின்னும் அல்லது உருக்கி வார்க்கும் முறை வேறானது. ஆகவே, அது எமது நாளாந்த பேச்சு அல்லது சொற் கோர்வை என்பற்வறில் இருந்தும், அhத்தததினை பரிமாறும் அல்லது எடுத்துக் கூறும் முறையில் இருந்தும் அதிகமதிகம் வேறுபட்டது. அடிப்படையில் அவற்றில் அர்த்தங்களும் அனுபவங்களும் அகராதிக்குள் வசிப்பதில்லை. அதனால்த்தான் புகழ்பெற்ற படைப்பாளியான ரி.எஸ்.எலியட் இலக்கிய வடிவங்களில் ஒன்றான கவிதை பற்றி எழுதும்போது கவிதையின் அர்த்தம் என்பது நாம் சொல்லும் சொற் பொருளுக்குள் வசப்படாமலே இருக்கிறது என்கிறார்.
எனவேதான் சொல்லின் நிர்ணயிக்கப்பட்ட பொருளை அறிவதால் அல்லது அகராதியில் இருந்து குறித்;த சொற்பொருளை வெளியெடுப்பதால் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்கிறார்கள்.
உண்மையில் இலக்கியம் அகராதியில் பதிக்கப்பட்டுள்ள நிர்ணயகரமான அர்த்தங்கள் மீதான சவாலாகவே அடிப்படையில் காணப்படுகன்து. அது முடிந்த முடிவான அர்த்தங்களைக் குலைப்பதாயும் மாற்றி அமைப்பதாயும் புதிது புனைவதாயும் காணப்படுகின்றது. அவை அர்த்தங்களின் பல்லடுக்காய் காணப்படுகின்றன. அதனால்த்தான் புகழ்பெற்ற இன்னொரு கவிஞரான ஆற்றூர் ரவிவர்மா இலக்கியப் படைப்புக்கள் மொழியின் எல்லைகளை எல்லையினறி; அதிகரிப்பதாகக் கூறுகிறார்.
வேறொரு விதமாகக் கூறினால், குறிப்பீட்டின் (அர்த்தம்) உறை நிலையை உடைத்து, முடிவற்ற அர்த்தங்களின் உபத்திக்கான வாயில்களை முடிவின்த் திறந்து செல்லும் உயிராற்றலே இலக்கியததின் அடிப்படையாகின்றது. இந்தச் சுட்டுப் பொருளின் முடிவற்ற பயணங்களிற்கான சாத்தியமே இலக்கயச் சொற்களின் அடிப்படையாகும். அது ஒருவகையில் சொற்களின் பொருள் தொக்கு (உழnயெவயவழைn) நிலையாகும்.
இது சொற்களின் நேர்பொருள் (னநழெவயவழைn) அல்லது அபிதாவிலிருந்து கிளைத்தாலும் அது சொல்லின் பொருள்கோடு நிலையின் மிகமிக ஆரம்பப் புள்ளி மட்டுமே. அதனால்த்தான் சமகாலத் தமிழின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜெயமோகன் மனத்தின் ஒரு பகுதி எழுத்தினைப்படித்தபடி செல்ல மனத்தின் வேறொரு பகுதி புழக்க மொழிக்கு அப்பால் மறை முகமாக இயங்கும் வேறொரு மொழியைப் படித்துச் செல்கிறது என்ற சாரப்பட எழுதுகிறார்.
இந்தப் பின்னணியில் இருந்து சமஸ்கிருத அழகியலாளர்களுள் ஒருவரான ஆனந்தவர்த்தனர் சொற்களின் இந்த மேலுந்துகை நிலை அல்லது அதன் பொதுத் தோற்றத்;திற்கு அப்பாலேயே இலக்கிய மொழியின் அடித்தளம் இருப்பதாக இனங்காண்கிறார். அதனை ‘த்வனி’ எனப் பெயரிடும் அவர், காவியத்தின் ஆன்மா த்வனியே என்று பிரகடனம் செய்கிறார். இந்தத் தொக்கு பொருள் அல்லது புழக்கமொழிக்கு அப்பால் அதிலிருந்து செட்டை விரிக்கும் பொருள்கள் அவற்றிற்கேயான அகவயத்தர்க்கங்களை உடையன. இவற்றை அழகியற் தர்க்கம் அல்லது கவித்துவத்தர்க்கம் என அழைக்க விரும்புகின்றேன். இவை அடிப்படையில் அதர்க்கங்களின் தர்க்கமாக உள்ளன. புpரியத்திற்குரிய நண்பன் அகிலன் எழுதியது போல இலக்கியங்கள் சொல்லால் சொல் ‘களை’யும் ஒருவகை வித்தையாக உள்ளன
0
முழு உள்ளடக்கம்

வாழக்கொடுத்த வழி

சி.ஜெயசங்கர்

எழுத முடியாத கவிதைகள்
இரைந்தெழுந்த பேரலைகள்
நெஞ்சக் கனகடலில் சுழன்டிக்க

முகங்கள் சலனமற்றுச் சாந்தமாய்
கண்கள் சிவப்பேறாப் பளிங்குகளாய்
வார்த்தைகள் கொதிப்பற்று
துயரற்று
எதுவுமே அற்று

அசாதாரணங்களை உள்ளமிழ்த்தி
சாதாரணமாய்
வெகு சாதாரணமாய்
பொய்யுக்கும் புரட்டுக்கும்
தாளமிட்டு வாழக்கொடுத்த வழி
என்செய்வோம் சொல்
0
முழு உள்ளடக்கம்

கனவுக்குள் அசையும் உடல்மொழி

...........................................................................
அனார்
மந்தமாக பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்

முற்றிய வசந்தம்
முழு அழகையும் வெளிப்படுத்தும் மலைத்தொடரில்
இரண்டு பேரருவிகள் பாய்கின்றன

மண் ருசி …
மண் மணம் … பாய்ந்த உடல்
ஒவ்வொரு சந்திப்புகளிலும்
புது நிலமாகி விளைகின்றது

வார்த்தைகள் எதுவுமில்லை …
ஆனால் நீ கதையொன்று சொல் என்கிறாய்
பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்

வானவர்கள் நமக்காக கூடியுள்ளனர்

உடல்மொழியில்
காட்டுப்புறாவின் கூவல் ஒலிக்கின்றது

கனவுகளை காய்த்து நிற்கின்ற
மா … மரம் நீயென்றால்
நான் உன் கனவிற்குள் சிரித்து
குலுங்கிக் கொண்டிருக்கும்
கொன்றைப் பூ மரமா …
0
முழு உள்ளடக்கம்

புலுனிகள்

மருதம் கேதீஸ்

பின் முற்றத்தில் வந்து சேர்ந்த புலுனிகள்
ஒன்றை ஒனறு; முந்தித்
தாவிக்களிக்கின்றன சில நிமிடங்களை

சில வேளை கூட்டமாய்
சிலவேளை தனியன்களாய்
நிலத்தில் வயிமர்த்திப் பறவாது
அவை இறக்கையடிப்பதைப் பார்ப்பது
அற்புதமெனக்கு

நானே புலுனிகளாக
சுற்றிச் சுற்றிப் பறந்தேன் உலகை
குhற்றானது துளிவாழ்வு

புலுனிகள் நடந்தால், சிரித்தால்
முகம் சிவந்தால் என
எதுவானாலும்
எனது முகத்தையே
அவை சூடிக்கொள்வதாய் உணர்ந்தேன்
ஆயினும்
எனது அழைப்பை
புலுனிகள் விரோதிகளைப்போலவே
நிராகரிக்கின்றன

யாவற்றிலும் பயம் கொண்ட
புலுனிகள் துணிச்சலாகச் செய்ததெல்லாம்
நான் ரசித்துப் பார்த்திருக்கும் போதே
கால்களை உந்தி
ஆகாயத்தில் லாவகமாகப் பறந்ததுதான்

இன்னும் தூசாயிருக்கிறது
பின் முற்றத்தில் புலுனிகள் பறந்த காற்று

(சி.ஜெயசங்கருக்கு)
0

துர்க்குறிகள்

கி.கலைமகள்

அங்கும் இங்கும்
சிதறிய
நாளிதழோடு
மிஞ்சிய
தேனீர்க் கோப்பைகளோடு

எனக்குரிய இடத்தை
மீண்டும்
அழுத்திய வண்ணம்

மூலையில் ஒதுக்கிய
குப்பைகளோடு
பாதி வெட்டிய
காய்கறிகளோடு

என்னை
மெல்ல மெல்ல
விழுங்கும் வீடு

இறுதியில்
நீ கேட்பாய்
என் பயணம் பற்றி

உனக்குப்
புரிந்த மொழியில்
உனக்கேயுரிய
அச்சுத்தலோடு

எனக்கே உரித்தான
மென்மையோடு
பதிலளிக்க நான்
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பேன்

விளக்கமுடியாத
புதிர்களோடு
உனக்கு விளங்காத
என் வெளிகளோடு
நான்
என்னுள்
நிரம்பிக் கிடக்கின்றன
ரகசியங்களோடு
துர்க்குறிகள்

விளக்குடன் விளையாடும்
குழந்தையின் குதூகலம்
உனக்குள்

உனக்குப் புலப்படாமல்
போர்களை நிகழ்த்தியபடி
என் மௌனம்
0

எரிந்தோடல்

தபின்

சபித்தலுக்கான நெருப்பினை
திரி சூடிக்கொள்வதற்கு
தானும் காரணியாகிவிட்டு
ஒரு மெழுகுதிரி எரிந்து
உருகி வழிந்துகொண்டு இருக்கின்றது
திரி கெஞ்சுதலுடன்
ஓலமிட
தப்பித்தோடுகிறது
மெழுகு
அதன் வெளிச்சம் உண்டாக்குகின்ற
விம்பத்தில் மட்டும்
திரி நானாகவும் மெழுகு நீயாகவும்
0

விமலாதாஸ் கவிதைகள்


விமலாதாஸ்

இதிக்கடன்
தலைசாய்த்து
நித்தமும் உறங்கிய
அகனற் உன் மார்பின்
எலும்புகளை ஒன்றுவிடாமல்
பொறுக்கி
என் மடிமீது வைத்து
நீயிருந்த ஆசனத்தே நானமர்ந்தேன்

பயணித்த வழியெல்லாம்
நம் வாழ்வின் வசந்தங்களையும் கனவுகளையும்
வழித்தெடுத்து
சேர்த்துக் கொட்டினேன்
நம் கட்டிலில்
0

இனி

அச்சம் இல்லை
அவலம் இல்லை
அந்தரித்தல் இல்லை
மூச்சுத்திணறுதல் இல்லை
முனகும் ஒலியின் வாதை இல்லை

தூக்கத்தில் விழிக்கும் தேவை இருக்காது
கசியும் கண்களில் ஈரம் இருக்காது
கரைந்தாலும் கேட்க ஆளிருக்காது
அழைக்கும் குரலுக்கு
அடுத்தகுரல் இருக்காது

காலையில் விழித்தால் காலியான அறை
வீட்டை நிறைத்த வெறுமை
அலையடங்கிய கடலாயானது மனது
0
முழு உள்ளடக்கம்

மழை

பஹீமா ஜஹான்

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார் கொண்டு
தன்னைப் போரத்;தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியழைக்கிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெல்லாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெல்லாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெல்லாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை
முழு உள்ளடக்கம்

சுவிஷேசங்கள்

பா.அகிலன்

“குற்றம் புரிவதில் தாகமுடையவனாக உள்ளேன்”
-ஜீன் ஜெனே

சுவிஷேசம் - 1

போக்கிரிகளில் கடைகெட்டவனும்
புனித இடங்களை
அழுக்காக்கும் மலவானும்
விதிவசத்தால் தொடநேர்ந்தால்
உயிர் முனையில் குத்திக் கொள்ளும் விஷவானும்
நற்குறிகளை அழிக்கவல்ல கொடூரனும்
காமாந்தகனுமாகிய
அவனிவன் உவன் எனப்படும்
இவனவன் உவனுக்கு
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

இருளே சீழே
எச்சிற் பாண்டமே
பொய்யே மெய்
மெய்யே பொய்
மெய்யைக் கடந்தான் பொய்யைக் கடந்தான்
பொய்யைக் கடந்தான் மெய்யைக் கடந்தான்
மெய்யைப் பொய்யைக் கடந்தான்
பூமியைக் கடந்தான் காண்


சுவிஷேசம் - 2

தீரா மதுமாந்தியும்
மாமிச வாடையால் உசுப்பப் பெறுபவனும்
தேகம் முழுவதும் குறி திறந்தவனும்
பச்சோந்தியும்
அன்பு காய்ந்தவனுமாகிய
அவன் எனப்படும் இவனுக்கும்
இவன் எனப்படும் அவனுக்கும்
இவனவனெனப்படும் அவனிவனுக்கும்
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

அழுக்கே
மலவாயே
தேகமொரு படகு
படகோட்டி பாக்கியவான்
நீர் கடந்து நீர் கடந்து
நீர் திறந்து
கரை திறந்து
அவனே வெளியேறிச் செல்கிறான்

சுவிஷேசம் - 3

சுயகைமனத்துள் சுருண்டவனும்
மலங்களை மெல்லுபவனும்
சிறுநீர்த் தொட்டிகளில் உறங்குபவனும்
பிண இலையானுமாகிய
அது எனப்படும் அவனுக்கும்
இது எனப்படும் இவனுக்கும்
அதுவிது எனப்படும் அவனிவனுக்கும்
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

புழுவே பூச்சியே
தீட்டுச் சேலையே
தூங்காதவன் பாக்கியவான்
அவனே பார்க்கிறான்
அவனே கேட்கிறான்
பாதை கடந்து பாதை கடந்து
அவனே
பாதையாக்கிச் செல்கிறான்

2008
முழு உள்ளடக்கம்

பழுதாய்ப்போன கனவுகள்

கோகுலராகவன்

ஒரு இழிவுப் புள்ளியில்
என் பறவைகள்
தம் சிறகுகளை இழந்தன
ஒருபாடல் தன் மெட்டை இழந்தது
குரல்கட்டிக் கிடக்கின்றான்
ஒரு கூத்தாடி

ஆயிரம் பறவைகள் பயம் கொண்டு
எழுந்தோடிச் சகதியில் மாண்டன
எனது
வஸீகரப் புன்னகையை
இக் கணத்தினில் இழந்தேன்

இடித்து விட்டு வெறும்
குலுக்கலுடன் போகின்றன
நீண்ட பாரவ+ர்திகள்

தாமரைக் குளத்தருகல்
என் வீட்டுக் கணற்றடியில்
பற்றி எரிகின்றன
அழகிய சிட்டுக்குருவிகளின் கூடுகள்

வெறும் விழி மெல்லும்
பழுதாய்ப் போன
கனவுகளின் ரீங்காரம்
ஒரு மரங்கொத்தி போல
காலங்களை நெடுகலும்
கொத்திக்கொண்டே இருக்கின்றது

முழு உள்ளடக்கம்

கட்டுரை

எழுத்துக் கவிதையிலிருந்து நிகழ்த்து கவிதைக்கு
காலத் தேவையில் கவிதையின் பரிமாணங்கள்

சி.ஜெயசங்கர்
...............................................................
ஈழத்தமிழ்க் கவிதை மரபுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியினைக் கொண்டதோடு ஈழத்தமிழர்தம் தனிததன்மைக்கும் பண்பாட்டுக்கும் வளம் சேர்ப்பவையாகவுமுள்ளன.

இத்தகைய தனிததுவமான மரபுகளின் தொடர்ச்சி காலத்துக்குக் காலம் புறச் செல்வாக்குகளுக்கு உட்பட்டும் மரபுகள், மாற்றங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமும் இருந்தவை. ஆயினும் மரபுகள் புழங்கப்பட்டும் பேணப்பட்டும் அறுபடாத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

மேற்குமயப்பட்ட நவீனவாக்க ஆதிக்கத்தின் காரணமாகக் கவிதை உட்பட இலக்கியம், கலை மற்றும் மருத்துவம், நீர் முகாமைத்துவம் என அனைத்து அறிவுமுறைமைகளிலும் திறன்களிலும் மரபுகளின் தொடர்ச்சியில் தகர்வுகள் ஏற்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே நவீன கவிதை வடிவமான புதுக்கவிதை மிகப் பெருமளவுக்கு ஈழத்தமிழரின் கவிதைமரபுகளிலிருந்து விலத்திய ஒரு தளத்தில் வசன கவிதையாக விசாலித்துக் கொண்டிருக்கிறது.ஈழத்தமிழ்க் கவிதை மரபுகள் சமூகங்களின் பல்வேறு தளங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு நோக்கங்களுடனும் இயங்கி வந்தவையாயினும் மிகப் பெருமளவுக்கு வசனத் தன்மை வாய்ந்ததும் கட்டுப்பாடுகள் மிகவும் குநை;தவையுமான புதுக்கவிதைகள் சமூகங்களின் பல்வேறு தளங்களிலும் ஊடுருவி எளிமையான சொற்கள், எளிமையான நடை, எளிமையான தொடர்பாடல் என வடிவமெடுத்துக் கொண்டது. சமூகங்களின் பல்வேறு தளங்களையும் ஊடறுத்து புதுக்கவிதை இயக்கம் பெற்றிருப்பினும் அது எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் தொகுதியுள் வாசிப்பு ஆர்வமும் இலக்கிய நாட்டமும் கொண்ட பகுதியினருக்கு உரியதாகவே இயங்கி வருகினற்மையும் குறிப்பிடத்தக்கதாகும். நவீன காலத்துக்கு முந்திய சமூகங்களின் வாய்மொழி மரபுகளோடு இயைந்திருந்த பொதுமக்களுக்கு உரியதான கவிதைப் பண்புகளில் இருந்து வேறுபட்டதாகவே புதுக்கவிதை மரபு விளங்குகிறது.

நவீன இலக்கிய வடிவமான புதுக்கவிதை மிகப் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நவீன கவிதை மரபுகளின் குழந்தையாகவே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. இரண்டாயிரம் வருடத் தொடர்ச்சியினைக் கொண்ட ஈழத்தமிழர்தம் கவிதை மரபுகளின் தொப்புள் கொடி உறவினை அது அத்துவிட்டிருக்கிறது என் கருத்தும் ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளில் புழங்கப்படும் கவிதைக் கொள்கைகள், இலக்கணங்கள், உத்திகள், நோக்குகள் என்பவை நவீன கவிதை மரபுகளை செழுமைப்படுத்தக் கூடிய கவிதை மூலவளங்களாக இருக்கின்றன என்ற கருத்தும் உள்வாங்கப்பட்டு உரையாடல்களுக்கும் உருவாக்கங்களுக்குமான தூண்டுதல்களும் ஆற்றுப்படுத்தல்களும் அவசியமா கின்றன. ஏனெனில் ஈழத்தமிழர் கவிதை மரபுகளில் கவிதை, புலவர்கள், வித்துவான்களிடத்தில் மட்டும் முடங்கிக்கிடந்த வடிவமல்ல. அது மொழிதலாய், இசையாய் சங்ககாலப்பாணர், விறலியர்களிடமிருந்து கிராமிய மக்கள் கவிமரபுகள் வரை பரந்துவிரிந்து இயங்கியவை.கிராமியக் கவிதையாக்கம் என்பது வாய்விட்டுச் சொல்லுவதற்கும் பாடுவதற்கும் மட்டுமல்லாது மனம் விட்டுச் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரியதாகவும் விளங்கின. இன்றும் அவை அவ்வாறு விளங்கி வருவதைக் காணவும் அனுபவிக்கவும் முடியும். இவை அச்சுவடிவம் பெறும்போது வாசிப்புக்குரிய இலக்கிய நயத்தையும் கொண்டிருக்கஜன்றன.இந்தப் பண்புகளைக் கருத்தில் கொண்ட ஆபிரிக்க நவீன கவிஞர்கள் தங்களுடைய சமூக எதிப்பியக்கங்களில் கவிதையைப் புதிய பரிமாணங்களில் புத்தாக்கம் செய்தனர். வாசிப்பதற்கே உரியதான நவீன கவிதையாக்க மரபில் இருந்து விலகித் தம் சூழலின் கிராமிய அல்லது வாய்மொழி மரபுகளின் பண்புகளை உள்வாங்கி கவிதை ஆக்கத்தை கட் புல வாசிப்புக்கப்பால் கட்புலத்துக்கும் செவிப்புலத்துக்கும் உரிய நிகழ்த்து கவிதையாகப் பரிணமிக்கச் செய்திருக்கின்றனர். இவை நிகழ்த்துகைக்குரிய நயங்களைக் கொண்டிருப்பதுடன், வாசிப்புக்குரிய நயங்களைக் கொண்டவையாகவும் அச்சுருவம் பெற்றிருக்கின்றன. இதனை எழுத்து மரபும் வாய்மொழி மரபும் இணைந்த மரபாக கோட்பாட்டு ருவாக்கம் செய்திருக்கின்றனர்.

ஈழத் தமிழர் ஓவிய மரபில் நிகழ் ஓவியம் செயல்வடிவம் பெற்று நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆயினும் உடுக்கடித்து சல்லாரி கொட்டி அம்மானை பாடும், காவியம் பாடும் வாய்மொழிப் பாடல் வளம் நிறைந்த தமிழர் கவிதை மரபில் நவீன கவிதை நிகழ்த்து கவிதை (ணைலிதுழிஐஉ ணைலிமிதீ) என்பதாகப் பரிமாணம் கொண்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. மாறாக நவீன கவிதையான புதுக்கவிதை நவீன கவிஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டுவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது.ஈழத்து நவீன கவிதை மரபில், கவிதை என்பது கவிதா நிகழ்வாகப் பிப்பெடுத்து புகழுற்று இருந்தாலும் அது நாடகக்காரர்களின் கைகளில் மேலுமொரு நாடக வகையாக கவிஞர்களுக்கு அப்பாலானதாக மிக இளம் பருவத்தில் அகாலமாய்ப் போயிற்று. ஆதிக்க எதிர்ப்புக்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்குமான கவிதைகள், தனித்த வாசிப்பு அனுபவத்திற்குள் சுருங்கிக்கடந்தவையல்ல. மேலும் கவிதைகள் என்பவை தனித்த எழுத்து வாசிப்புச் செயபாடுகளுக்கு உரியவையுமல்ல. ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளிலும் உலகக் கவிதை மரபுகளிலும் கவிதை குழுநிலைக் கொண்டாட்டங்களுக்கும் அனுபவங்களுக்கும் உரியவையாக இருந்து வருவதொன்றும் ஆச்சரியமானதுமல்ல. இத்தகைய பின்னணியில் ஈழததமிழர்தம் கவிதை மரபுகளில் இருந்து ஊட்டம் பெற்ற நவீன கவிதைகளின் நிகழ்த்து கவிதை உருவாக்கம் காலத்தின் தேவையாகிறது. இது கவிதையை மக்கள் மயப்படுத்துவதுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழரின் கவிதை மரபுகளின் தொடர்ச்சியை முன்னெடுப்பதுடனும்சம்மந்தப்பட்டிருக்கிறது. .

கட்டுரை

புனிதத்துக்குள் கட்டுறுறும் அபத்தத்தின் முகம்
வெள்ளை மாரனார்
...............................................................
மானிடக் குரலுக்கு அப்பாற்பட்டு இலக்கிய பிரதி என்னும் நிலையைக் கடந்து அதி உன்னத சிருஷ்டியாக கட்டமைக்கப்பட்ட திருமுறைகள் பாடு பொருளாலும் பாடப்பட்டோர் இயல்பாலும் தொகுக்கப் பட்ட முறைமையாலும் மதிப்பு வாய்ந்த புனிதத்; தொகுப்புக்களாகத்; தம்மைத் தகவமைத்துக் கொண்டன. அதியுயர் மீ தன்மைப் புனிதங்கள் யதாhத்தத்திற்கு அப்பாற்பட்டவை. இயல்பை மீறி மத இயக்கங்களுக்கூடாக கட்டமைக்கப்பட்ட இப் புனிதங்கள் கட்டுடைத்தலுக்கூடாக மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு அதி உன்னத சக்தியான இறைவனைப் போற்றும் இவ் இலக்கியங்கள் வடிவ நேர்த்தியாலும் புலப்பமில்லா ஆழ்பொருள் சிறப்பாலும் இறுக்கமான கோட்பாட்டியலுக்கூடாக தம்மை முன்னிலைப் படுத்துவன. மத அரசியலுக்கூடாக சமூக வன்முறைகளை முன்னெடுத்த சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் முதலானோர் இறையியல் என்னும் அதி மேதகு சிருஷ்டியில் தம்மை மறைத்துக் கொண்டனர். சைவ சமயத்தை தொண்டர்கள் அணுகுவதற்கு உவந்த வாழ்வியல் நெறியாக மாற்றியமைத்த இவர்களை இந்து மதம் சமயக் குரவர்களாக்க கௌரவித்தது. சங்கம வழிபாட்டுக் கூடாக சிவதொண்டர் சிவனே எனக் கருதி ஆலயங்களும் இந்து சமய நிவனங்களும் இப் புனிதர்களின் பிரதிமைகளை வழிபாட்டுப் பொருளாக்கிப் போற்றித் துதித்தன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சிப்படுத்தப்படாமல் கண்ணியமான முறையில் இருட்டடிப்புச் செய்யப்படும் இவர்களின் நிஜம் அபத்த மானது. ஆராதிக்கத்தகாத அசுசியானது . ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
என்னும் மறு மாற்றத்திருத்தாண்டக நாவுக்கரசர் கூற்றுக்கமைய அதிகார வர்க்க நிலைகளுக்கு எதிராக உணர்வெழுச்சியும் அனைத்து சாதிய மக்களையும் சைவசமயம் என்ற கட்டுக்குள் ஒருங்கிணைத்து போராடிய சமயக் குரவருள் முதன்மையானவர் முக்கியமானவர் சம்பந்தர் ஆவார்.திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றவர்களைத் திருக்கோயிலுக்குள் அழைத்துச் செல்வது, வேதியர் வீட்டின் நடுக் கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் வேள்வி குண்டத்துக்கு அருகில் அவர்களைத் தங்கவைப்பது போன்ற பல புரட்சிகளைச் சம்பந்தர் செய்த போதிலும் சைவசித்தாந்தம் கூறும் நான் என்னும் அகந்தையையும் தான் என்னும் மமதையையும் இறுதிவரைக்கும் அறுக்காது தன்முனைப்புடன் செயற் கருமங்களை ஆற்றியவராகவே காணப்பட்டார். இதனை ‘ஆணை நமதே’ என்ற ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கும் ‘ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தலெளிதாமே’ எனும் இவரது பிரமபுரம் மீதான பதிகமும் ‘காழியுண் ஞானசம்பந்தன் தமிழ் பத்துங் கொண்டு வைகீயிசை பாட வல்லார் குளிர் வானத்துயர்வாரே’ எனும் திருவலி தாயத்தை பாடிய பதிகமும் நினைவு கூர்ந்து நிற்கினற்து. இவரின் பெரும்பாலான பதிகங்களில் ஈற்றடி (திருக்கடைக் காப்பு) தன்னை முதன்மைப்படுத்திப் பாடுகின்ற பாடலாகவே அமைகின்றது. ‘புண்ணிய பாவம் பெருந்துமிக் கான்மியமும் மண்முதல் மாயைகாண் மாயையும் -கண்ணிய அஞ்ஞானங் காட்டுமிவ் வாணவமும் இம் மூன்றும் மெய்ஞ் ஞானிக் காக விடு’
என்னும் பாடல் ‘கண்ணிய அஞ்ஞானம்காட்டும் ஆணவம் சுட்டியறிவதாகய விபரீத உணர்வை ஆன்மாக்களுக்கு ஏற்படுத்தி மெய்யுணர்வை மறைத்து பிறவிக்கு வித்தாகும்’ எனக் கூறுகின்றது. ஆனால் பேரின்ப நெறிக்கு அப்பாற்பட்டு நான் என்னும் அகந்தையோடு இருந்த சம்பந்தருக்கு மாத்திரம் இறுதிப் பேறாகிய வீடு பேறு எவ்வாறு கைகூடியது சிவஞானபோதச் சூத்திரப்படி சிவ ஞானிகளாகிய இறை அன்பரோடு சம்பந்தர் மரீஇ இருந்தாராயினும் ஆலயங்களுக்குச் செனறு; அரனென ஆண்டவனைத் தொழுதாராயினும் அம்மலங் கழீஇ என்னும் மெய்கண்ட தேவர் கூற்றுகமைய மலத்தை நீக்கினார் இல்லை. எனவே முத்தியாகிய வீடுபேறு திருநல்லூர் பெருமணத்தில் சம்பந்தருக்கு கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. ஆணவ மலத்தை நீக்காத சம்பந்தரை நோக்கி வானமும் நிலமும் கேட்கும் வண்ணம் இறைவன் ‘ஈனமாம் பறிவி தீர யாவரும் புகுக’ என எவ்வா கூறுவாh.; எனவே பிறவிக்குக் காரணமாகிய மலமாசை நீக்காத சம்பந்தர் ‘நாத நாம நமச்சி வாயவே’ எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற்றல்ல. ஏனெனில் ‘மேலைக்கு வருவினையே தென்னி லங்கண் விருப்புவெறுப் பெனவறியல் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்லா மென்னி னாமென் முற்றியதன் பயனுனக்கு முளைக்கு மென்பார்’
என்னும் சிவப்பிரகாசப் பாடலடி செய்வினை நுகருங்கால் விளையுமெனக் கூறுகிறது. எனவே அனுபவிக்கு பொருட்டு எஞ்சியிருக்கும் சஞ்சிதவினை விடுத்து சம்பந்தர் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் எவ்வாறு முத்தியடைந்தார். ‘அவ்வினைக்கவ்வினை யாமென் சொல்லு மஃதவீர்’ என்னும் பாடலடியில் நாம் முற்பிறவியில் ஈட்டிய தீவினைக்கேற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்டும் எனக் கூறும் சம்பந்தர்
‘கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடியோம் செய்வினை வந்தெம்மைத் தீண்ட பெறாதிரு நீலகண்டம்’
என்னும் பாடலடியில் கைத்தொண்டு செய்து இறை கழலைப் போற்றினால் நாம் செய்தவினை நம்மைத் தீண்டாது என்பார். இவ்வெடுகோளுக்கமைய சம்மந்தர் தமக்கென ஒரு கோட்பாட்டை அமைத்து அவ்வழியில் சாமீப முத்தியை அடைந்தார் என்றே கருத வேண்டியுள்ளது.தன் முனைப்புடன் தான் என்னும் மமதையுடன் தன்னை முன்னிலைப்படுத்தும் சம்மந்தரின் செயலுக்கு பிறிதொரு உதாரணமாக திருநீலகண்டப் பெரும்பாணருடைய அன்னையார் பிறந்த ஊரான திருத் தருமபுரத்தில் யாழ்முரி பாடியதைக் கூறலாம்.சம்பந்தர் திருக்கோழம்பம் வைகல்மாடக் கோயில் முதலிய பல தலங்களைப் பணிந்து பாடித் திருத்தருமபுரத்தில் வாழும் நாளில் திருநீலகண்டப் பெரும்பாணருடைய சுற்றத்தார் திருஞான சம்பந்தரின் பதிகத்தைச் சிறந்த முறையில் பாணர் யாழிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகர் கண்டத்திலும் கருவியினும் அடங்கா வண்ணம் மாதர் மடப்பிடி என்னும் திருப்பதிகத்தைத் பாடினார். யாழைக் காட்டிலும் இசையே வலிமை உடையது என்பதனால் இப் பதிகம் யாழ் முரி (முரி வலிமை) என அழைக்கப்படுகிறது. இச் செயல் ஊராரை அன்றி பாணரையும் பெரிதும் பாதித்தது. சம்பந்தர் பாட அத் திருப்பதிகத்தின் இசையை யாழில் அடக்க முடியாது தவித்த பாணர் வெய்து நடுங்கித் தன் யாழ்கருவியை உடைக்க ஓங்கினார். அச் சமயம் சம்பந்தர் பரிவு கொண்டார் போன்று அதனைத் தடுத்து ‘ஐயரே நீவிர் யாழை முறிக்கப் புகுவது எதற்கு சிவபிரானர் திருவருட் பெருமையெல்லாம் இக் கருவியில் அடங்குதல் கூடுமோ சிந்தையால் அளவு படாப் பதிகவிசை செயலளவில் எய்தா ஆதலின் நீவிர் இந்த யாழினைக் கொண்டே இறைவன் திருப்பதிக இசையினை வந்தவாறு பாடி வாசிப்பீராக’எனக் கூறி தம் கையில் உள்ள யாழை மீண்டும் கொடுத்ததாகப் பெரியபுராணம் 2354, 2355 ஆம் பாடல்கள் உரைக்கின்றன. சம்பந்தரின் இச் செயல் எவ்வகையிலும் மேலான செயலல்ல. சிந்தைக்கொவ்வா சிறுபிள்ளை ஒன்றின் செயலாகவே இற்றைவரை இது கருதப்படுகின்றது.சமணபௌத்தர்களின் ஆசார அனுஷ்டானங்களும் உலக வாழ்க்கை பற்றிய யதார்த்தமான அணுகுமுiயும் கொல்லாமை, நெறிபிறழாமை, புலால் உண்ணாமை பற்றிய உயர்ந்த கருத்துக்களும் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க மதமாக இவற்றைக் கட்டி யெழுப்பியதுடன் இம் மதங்களைச் சமூக அந்தஸ்து மிக்க மதங்களாக மாற்றி அமைக்கவும் கால்கோலாயின. அவமானகரமான சாதியத்துக்கெதிரான பரப்புரைகளை முன்வைத்த இம் மதங்கள் யாகங்களில் மிருகங்களைப் பலியிடுவதைக் கண்டித்ததுடன் பிராமண மதத்தின் கோட்பாடுகளையும் நிராகரித்து கேள்விக்குட்படுத்தியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சமூக நீதிக் கருது;துக்கூடாகவும் திருக்குறள், நாலடியார் முதலான கீழ்க்கணக்கு நூல்களுக்கூடாகவும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களுக்கூடாகவும் தேசிய உணர்வும் சுதந்திர உணர்வும் எஞ்சியிருந்த சூழலில் சமூக அந்தஸ்தை ஓரளவுக்கு நிலைப்படுத்திக் கொண்ட இம் மதங்களை யதார்த்தமான உலக அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இறைத்துவத்தை வலியுத்தும் இந்து சமய அமைப்புக்களால் சுலபத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. இம் மதங்களின் எழுச்சியைச் சகிக்க முடியாத சம்பந்தர் அம் மதங்கள் மீது காழ்ப்புக் கொண்டமை இயல்பானதே. இதனை ‘சாக்கியர் வன் சமண் கையர் மெய்யியல் தடு மாற்றத்தார்’ என்னும் இராமேஸ்வரத் தலப்பதிகம் கொண்டும் ‘சாக்கியர் சமண் படுகையர் பொய்ம் மொழி ஆக்கய உரை கொளேல்’
என்னும் திருக்கருக்குடி பதிகம் கொண்டும் அறியலாம். சமண பௌத்தர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி சம்பந்தர் பாடல்களில் வசைகளாகவும் வெளிப்படுகின்றன. குறிப்பாக இவரின் பத்தாம் பதிகங்களில் இதனைக் காணலாம். சாக்கியப் பேய்கள் (திருமழப் பாடிப் பதிகம்) என்றும் பிதற்றும் பேதையராஞ் சமண் சாக்கியரென்றும் (திருவாவ+ர்ப் பசுபதீச் சரப்பதிகம்) மாசாருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித்திரியவே (திருச் சொம்பன் பள்ளித் திருப்பதிகம்) என்னும் வசை பொழியும் சம்பந்தர் சமண பௌத்த துறவிகளின் கோலத்தை அழகுடையதும் பறிர்பால் காணாததும் அவர்க்கேயுரிய வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தியவர் என்றும் கூறியும் இகழ்ந்துரைப்பார். இதனை ‘செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை’
என்னும் திருக்காயில் பதிகம் விளக்கி நிற்கிறது. இதனைப் போன்று இரந்து உண்டு உயிர் வாழும் பௌத்த பிக்குகளின் மேதகு நிலை ‘மாசங்கற் சமண் மண்டைக் கையர் குண்டக் குணமிலிகள்’ என்னும் பாடலில் இகழ்ந்து நோக்கப்படுகின்றது. உண்ணாது நோகப்படும் பௌத்த சமண துறவிகளின் உயரிய தவமும் சம்பந்தரால் ‘தடுக்குடைக் கையரும் சாக்கியரும் சாதியி னீங்கய வத்தவத்தார்’ எனக் கூறி இகழப்படுகிறது.கடவுள் உண்டெனக் கொள்ளாத சமணத்தில் அந்தக் கடவுளின் தானத்தில் இருக்கும் நித்திய சித்தனும் முத்தனும் பெத்தனாகிய சீவனுக்கு உதவி புரிவதில்லை. இறைவன் துணையின்றி; சீவன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு முத்தி பெறுமென சமணர் கொள்வது அடிக்கிணற்றில் உள்ள வாளி இழுப்பவன் இனறி; தானாகவே மேலே வருவதை ஒக்குமெனக் கூறி சித்தாந்திகள் கண்டிப்பர். இவர்களைப் போன்று ‘மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்’ என திருநெய்து;தான பதிகத்தில் கண்டிக்கும் சம்பந்தர் நாள் தோறும் இறைவனை துதித்து அவனை நெஞ்சில் ஏற்றும் சிவனடியார்க்கு வருந்தும் நோய்கள் தாக்காது என்பார். இதனை ‘நித்தம்பயி னிமலனுரை நெய்தானமதேத்தும் சித்தமுடை யடியாருடல் சிறு நோயடையாவே’
என்னும் அடி தெளிவுபடுத்தி நிற்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான அக் கருத்துக்களைக் கூறி சமண மதம் மக்களைத் தமக்குள் உள்வாங்கக் கொண்டது. அகம் புறம் என்னும் வாழ்வியல் நெறிக்குள் அகப்பட்டு துன்பத்தால் துவண்டு புரையேறிப் போன புண்பட்ட நெஞ்சுடன் வாழ்ந்த ஆன்றோருக்கு சமண பௌத்த போதனைகள் அருமருந்தாயின. மக்கள் அம் மதத்தின்பாற் ஈர்க்கப்பட்டு அலையலையாகச் சென்று மதம் மாறுவதைக் காணச்சகிக்காத சம்பந்தர் ‘வஞ்சமண தேரர் மதிகேடர் தம் மனத் தறிவிலாதவர், புத்தருந் தோகை யம் பீலிகொள் பொய்ம் மொழி பித்தரும் பேசுவ பேச்சல்ல’ எனக் கூறிக் கண்டித்து நெறியற்று குணங் குறியற்று சமணர் உரை கேட்டு நிற்கும் ஊரில் மறியேந்திய இறைவனடியே துணையாகும் என்பதை.
‘நெறியில்வரு பேராவகை நினையா நினைவொன்றை அறிவில்சம ணாதருரை கேட்டுமயராதேநெறியில் அவர் குறிகணணினை யாதே நின்றிய+ரில்மறியேந்திய கையானடி வாழ்த்துமது வாழ்த்தே’திருநின்ய+ர் பாடலடி கொண்டு விளக்குவார். எனவே வாசிதீர (வேற்றுமை நீங்க) அடியவர்க்கு வலிந்து அருள் செய்து பேணும் பெரியார் எம் மதத்தில் உள்ளனர்? இந்துமதமொன்றிலேயே உள்ளனர். எனவே அன்பற்று ஏசி இகழ்ந்துரைக்கும் புறச்சமயத்தாராகிய சமண பௌத்த சொல் கேளேல் எனக் கூறி திருவலிதாயப் பதிகத்தில் சமணர்பாற் செனற் இந்துக்களை வலிந்து இழுப்பார்.பௌத்தருக்கு எதிராக சம்பந்தர் தொடுத்த அதியுச்ச வன்முiயாகப் போதி மங்கையில் புத்தநந்தி என்னும் தேரரின் தலையில் இடி விழுந்து உடலில் இருந்து தலை துண்டாகும்படி. ‘புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணிவார் வினைப் பகைக் கத்திர மாவன அச்செழுத்துமே’
எனும் பாடலடி பாடி அவரைக் கொனற்மையைக் கூறலாம். பரசமயக் கோளரி திருஞான சம்மந்தரின் அத்திரவாக்கினால் இடி வீழ்ந்து புத்தநந்தியின் தலை முண்டமென உடல் கூறுபட்டமையை நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொகையில்.
‘................................................................ நேர்வந்தபுத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான்’
என்னும் செய்யுள் அடிகொண்டு போற்றுவார். சேக்கிழார் சம்பந்தரின் இவ்விழிந்த செயல் தன்னை நற்செயலெனக் கருதி ‘ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே உருமிடித்து விளப் புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்கெ’ எனப் பாடித் துதிக்கிறார். ‘அறவினை யாதெனில் யாதொன்றும் கொல்லாமை கோறல்’ ‘நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி’ எனப் பொய்யா மொழிப் புலவன் வாக்கிற்கிணங்க தமிழ் வேதமாகய திருமந்திரம். ‘கொல்லிடு குத்தென் கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச் செல்லிடு நில்லெனறு; தீவாய் நரகிடை நில்லிடுமென்று நித்துவர் தாமே’
எனக் கூறுகிறது. அஃதாவது கொல்லென்றும் எறி என்றும் குத்தென்றும் கூறி அங்கணமே செய்வித்தும் செய்துவரும் கொடியோர்களை கூற்றுவன் தன் ஏவலரூடாக வன்மையான கயிற்றில் கட்டி இடிமுழக்கம் போல் முழங்க நில்லென்று கூறி நரகடை வீழ்த்தி பொறுக்கமுடியாத பெருந் துன்பத்தை விளைவிப்பான் எனவே இன்னா செய்யாது இன் நெறி என்னும் அன்பின் நெறிப்பாற்பட்டு ஒழுகும் இந்து மதம் சம்பந் தரின் உயிர்க் கொலையை மாத்திரம் எவ்வாறு நியாயப்படுத்துகிறது. சிவநெறி ஒன்றே மெய் நெறியெனக் கொண்டு அவ்வழி நிற்பவன் உண்மைச் சிவ தொண்டன் ஆகான் இதனை சுந்தரருக்கு இறைவன் கூறுவதைப்போல் ‘பெருமையால் தம்மை ஒப்பார் பேணாலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்ம் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்’எனவரும் பாடல் உண்மை அடியார் எவர் என்பதை விளக்கிநிற்கின்றது சிவனைப் பற்றும் திருத்தொண்டர் என்னும் சிவதொண்டரின் பண்பும் இத்தகையதே ஆகும். அறநெறிதவறி மதவெறி கொண்டு ஒரு நெறிக்கமைய உயிர்க் கொலையைச் செய்த சம்பந்தரை இந்துமதம் தொண்டர்கள் தொழுவதற்குரிய அறுபத்து மூவருள் ஒருவராக வைத்துப் போவது விந்தையிலும் விந்தையானது. மெய்நெறியாகிய சிவநெறியை மாத்திரம் கருத்திற் கொண்டு அறத்திற்கு அப்பாற்பட்டு மறத்தின் கண் ஒழுகும் சம்பந்தரை ‘பவமதனை அறமாற்றும் பாங்கனில் ஓங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெஞ் ஞானம் தவ முதல்வர்’ என பெரிய புராணம் போற்றித் துதிப்பது அதனிலும் விந்தையானது. இந்துத்துவம் கட்டியெழுப்பப்படும்போது அதனை எதிர்த்த அவைதீக மதங்களின் வீழ்ச்சியானது தவிர்க்கமுடியாத ஒன்றேயாகும். எனவே சம்பந்தர் வீப+தி ஒன்றைத் தவிர வேறொன்றினாலும் குணப் படுத்த முடியா வெப்பு நோயை பாண்டிய அரசனுக்கு வழங்கியமைக்கான பிரதான காரணம் யாதெனில் அரசனை மதமாற்றம் செய்யவும் அவனுக்கூடாக இந்துத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கேயாகும். தருக்கவாதினாலும் மந்திர தந்திரத்தாலும் ஏலவே சமண பௌத்தரை விரட்டிய சம்பந்தர் அனல் வாதம் புனல்வாதம் என்னும் காட்சி அளவை கொண்டும் இந்துத்துவத்தை நிறுவ முற்பட்டு அதிலும் வெற்றி கண்டார். ‘தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ்’ எனத் தொடங்கும் பாடலைப்பாடி அனல்வாதம் செய்து சமணரைத் தோல்வியடையச் செய்த சம்பந்தர் சமணரை முற்றாக அழிக்க எண்ணி புனல்வாதம் செய்தார். இவ்வாதில் சமணர்கள் தோல்வியுறும் பட்சத்தில் கழுவில் ஏற்றப்படுவார்கள் என்னும் முன் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. சிவனடியார் நிந்தை சிவநிந்தை செய்தநுமக்கு ஏற்ற தண்டம் இதுவோ? சிவபெருமானுடைய திருவருளினாலே நாம் வென்றோமாயின் உம்மைக் கழுவிலேற்றுவோம். என்னும் சம்பந்தரின் கூற்றை திருவிளையாடற் புராணம். ‘அடியார் பதினா றாயிர ருள்ளார் சிவனை யவமதித்தகொடியார் நீவி ருமக்கே தண்ட மிதுவோ கொன்றைமதி முடியா ரருளா லுங்களைநாம் வென்றே மாயின் மூவிலைவேவடிவா னிரைது;த கழுமுனையி லிடுவே மதுவே வழக்கென்றார்’(சமணரைக் கழுவேற்றிய படலம், பாடல் 46)
என்னும் அறுசீரடி ஆசிரிய விருத்தப் பாவடி கொண்டு அறியலாம்.தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாவதென்று சமணர் கூற அதனை மறுத்த சம்பந்தர் ‘இங்கே அடியார் பதினாறாயிரவர் உள்ளாராகலின் நுங்கள் அடிமை வேண்டற் பாலதன்று. உமக்கேற்ற தண்டம் இதுவன்று’ எனக் கூறுவது எங்ஙனம்? ஜீவகாருண்யமான செயலாகக் கருதப்படும். அன்பு அகத்தில் ஒளிர அறத்தின் பாற்பட்டு மன்னுயிர்க்கு நன்னயம் செய்தலே கடனென இந்துமதம் கூற அதற்கு அப்பாற்பட்டு சம்பந்தர் செய்த இப்படுபாதகச் செயலை ஒரு காலும் நியாயப்படுத்த முடியாது. இதனாலேயே சேக்கிழார் தன் பெரியபுராணத்தில் ‘இவ்வாதிலே தோற்தவர் செய்வது இன்ன தென்பதனை ஒட்டி வாது செய்யவேண்டும்’ என குலச்சிறையார் கூறுவதாகவும் அதற்குச் சமணர் வாய் சோர்ந்து தாமே தனி வாதி லழிந்தோ வாகல் வெங்கழு வேற்று வாணி வேந்தனே யென்று கூறுவதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தர் கீர்த்திக்குப் பங்கம் விளையாவண்ணம் இக் கூற்றை சேக்கிழார் முன்வைப்பது இந்துத்துவத்தின் பொருட்டு சம்பந்தரை புனித புருஷராக்கி காப்பதற்கே அனறி; பிறிதொன்றி;ல்லை. ‘குழுவா யெதிர்ந்த வுறிக்கைப் பறிதலைக் குண்டர் தங்கள் கழுவாவுடலம் கழுவின வாக்கிய கபகமே’
என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 28 ஆம் பாடலடி சேக்கிழார் கூற்றை மறுத்து திருஞானசம்பந்தப்பிள்ளையாரே சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகக் கூறும். ஆயினும் சேக்கிழார் கூற்றுக்கு இயைந்தாற்போல்.
‘தம்பால் தோல்வியுற்ற சமணர்கள் கழுவிலேறி உயிர் விடாதபடி அவர்களை ஞானசம்பந்தர் தடுத்து அருளி னாரென்றும் சாவாயினும் வாது செய்யும் இயல்புடைய சமணர்கள் தாங்களே கழுவிலேறி உயிர் துந்தனர்’
என்று பெரும் பற்றிப் புலிய+ர் நம்பி கூறுவார். எவரெவர் எவ்வாறு கூறினாராயினும் ‘கொன்றிலாரைக் கொலச்சொலிக் கூறினார், இற்பிறந் தேழ்நரகு’ என்னும் திருமந்திரப் பாடலடிக்கிணங்க கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லா சமணரைக் கொல்லும் படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்பமுவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.இதனைவிட மிகக் கொடியதாகத் திருவிளையாடற் புராணத்தில் கழுவில் சமணர்கள் ஏற்றப்படுவது பாடப்படுகிறது. குலச்சிறையார் தச்சர் பலரைக் கூட்டி வைரமுடைய நீண்ட முதிர்ந்த மரங்களில் சூலவடிவாய் கழுக்களை நிறுத்தியதை ‘தச்சர் பலரை தொகுவித்துக் காழி நெடிய பழு மரத்தில் சூலவடிவாய்க் கழுநிறுவி’ என்னும் பாடலடிக்கூடாக எடுத்துரைக்கும் திருவிளையாடற் புராணம் சமணரின் உடல்களை பருந்துகள், காக்கைகள், நரிகள், நாய்கள் கௌவிப்பத் தின்னும் காட்சியை மெய்யுறையும் வண்ணம்
‘..................................................................... மடிந்தோர் யாருஞ்சுற்றிய சேனங் காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப்புற்றிநின் நீர்த்துத் தின்னக் கடந்தனர்’
எனப் பாடிட பெரியபுராணமோ இதற்கு எதிர்மாக கழுவிலேற்ற நிறுத்தப்பட்ட தம்பங்களை
‘தோற்றவர் கழுவில் ஏற்றித் தோற்றிட தோற்றுந் தம்பம் ஆற்றிடை அமணரோலை அழிவினால் ஆர்த்ததம்பம்வேற்றொரு தெய்வமின்மை விளங்கிய பதாகைத் தம்பம்போற்று சீர் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பமாகும்’
எனப் போற்றிப் புகழ்கிறது. அன்பு, அகிம்சை, ஜீவகாருண்யம் என ஒழுக்கத்தைப் போதிக்கும் இந்துமதம் ஈவிரக்கமற்று துடிக்கத்துடிக்க சமணர்களை வதைத்து கொடூர மாகப் படுகொலை செய்த தம்பங்களை சிவபெருமானையனறி; வேறொரு தெய்வம் இல்லை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திக் காட்டும் கொடித்தம்பங்களாகவும் திருஞானசம்பந்தன் புகழை உலகுக்கு எடுத்துக்காட்டும் வெற்றித் தம்பங்களாகவும் நின்றன என எவ்வாறு பாடும்? அருள் நூலென்றும் அன்பால் விளைந்த அமுதசுரபி என்றும் படிக்குந் தோறும் பயன் நல்கி மனித இனத்தை உயர்த்தி உய்விக்கும் நூல் என்றும் சிறப்பிக்கப்படும் பெரியபுராணம் அறத்திகு அப்பாற்பட்டு உயிர்க் கொலையைப் புகழ்ந்துரைப்பது நன்றன்று. சிவநிந்தை செய்பவனின் சிந்தைதனை மாற்றி அவனை சிவநெறியின் பாற்பட்டு ஒழுகச் செய்தலே தர்மம். அதனை விடுத்து அவனைக் கொல்வது அதர்மமே அனறி; தர்மம் ஆகாது.அன்பும் சிவமும் இரண்டு என்பதை மறுத்து அன்பைச் சிவமாகக் கொள்வதே சைவநெறி. அன்பாகிய வித்தே சிவமாய் விளைந்து பேரின்பமாகிய வீடுபேற்றைத் தரும். அளவில்லாப் பேரன்பும் அப்பழுக்கில்லா அறமும் பேதமற்று ஒன்றற நிற்கும் அருள் நெறியான சைவநெறிக்கு மாசு கற்பிப்பது முறைமையன்று. ஆனால் மதத்தின் பெயரில் புனிதராகப் பிரதிஷ்டை செய்யப்படும் பிரதிமைகளை உடைத்து வெளி யுலகுக்கு அம்பலப்படுத்துவது மனிதநேயச் செயலாகும். இந்துத்துவத்தின் பெயரால் பண்பாட்டு அடையாளங்களை அழித்து வர்ணாச்சிர தர்மத்தை உயர்த்திப் பிடித்து மதவெறி கொண்டு அலையும் போலிமைகளின் அபத்த விம்பம் விரிந்த தளத்தில் தூல நோக்கோடு பன்முக வாசிப்புக்கு உட்படுது;தப்பட வேண்டியவை. மரபுக்குள் ஒளிந்திருக்கும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்தல், படைப்பின் புனிதத்துவத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தல், மக்களிடம் நிறைந்துள்ள எதிர்மரபுக் கூறுகளைத் தேடுதல், ஒழுங்கமைவுகளைச் சிதைத்தல் போன்றவற்றை உண்மையான நவீனமயமாதலாகக் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுமானால் அவை தமிழ் இலக்கியத்தை உரம் பெற்று வளம்பெறச் செய்யும். .