கபீர் கவிதைகள்


ஆங்கலம் வழி தமிழில்: திசையுக்கரசிங்கன்

மாயையும் யதார்த்தமும்

எது பார்க்கப்பட்டதோ அது உண்மையில்லை
எதுவோ அது சொல்லப்படவில்லை
நம்பிக்கை வாhத்தைகள் இன்றிப் புரிவதும்
பார்க்கப்படாமல் வருவதுமாகும்
புறக்கணிப்பு நோக்கிய அறிவுடைப்பட்டுணர்வின் முழுமை
ஆனால், எவ்வளவு அதிசயம்
வடிவமற்ற கடவுளை வணங்குவர் சிலர்
அவரது பல்வேறு வடிவங்களை வழிபடுவர் சிலர்
எல்லாவித கபிதங்களுக்கும் அப்பால் உள்ளார் அவர்
இசையை எழுதமுடியாது என
அறிபவன் மட்டுமே அறிவான்
அதற்கப்புறம் ஸ்வரத்தினை மட்டும்
கபீர் கூறுகிறான் விழிப்பு ஒனறு; மட்டுமே
மாயையைத் தாண்டுமேன்
0

என் தேகத்தினுள் நிலவு

என் தேகத்தினுள் பிரகாசிக்கிறது நிலவு
என் குருட்டு விழிகளோ காண்பதில்லை
என்னுள்ளே நிலவாதலால் சூரியனும்....
முடிவின்மையின் தடையற்ற பறை ஒலிக்கிறது என்னுள்
ஆனால், என் செவிட்டுக் காதுகளோ கேட்பதில்லை

நான் எனது என்பதற்காய் கூக்குரலிடுகிறான் நெடுங்காலமாய் மனிதன்
அவனது காரியங்களோ எதுவும் அற்றவை
எப்போது நான், எனது மீதான பிடிப்பு இறக்கிறதோ
அப்போது நிறைவேறும் கடவுளின் காரியம்
அறிவெய்தல் என்பதற்கப்பால்
காரிய இலக்கென வேறில்லை
எப்போது நிகழ்கிறதோ அது
அப்போது போய்விடும் காரியமாற்றலும்
பூ கனிக்காக மலர்கிறது கனியெப்போது வருகின்றதோ போய்விடுகின்றது
பூ அப்போது
மானுள் உள்ளது கஸ்தூரி, தன்னுள் ஆராயாமல் புற்களை நாடியலைகின்றது அது
0
முழு உள்ளடக்கம்

நச்சுமரம்

ஆங்கலமூலம் - வில்லியம் பிளேக்
தமிழில் - க.சத்தியதாசன்

நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன்
அதை வெளிக்காட்டினேன் அது முடிவுக்கு வந்தது.
நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை
மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது.

எனது அச்சத்தால் அதற்கு கண்ணீரைக் கொண்டு
இரவுபகலாய் நீர் ஊற்றினேன்
வஞ்சக தந்திரங்களாலும் புன்னகைகளாலும்
ஒளி தந்தேன்

பளபளக்கும் கனி ஒன்i
அது ஏந்தும் காலம் வரை
இரவு பகலாய் அது வளர்ந்தது
ஒளிமிகுந்த அக்கனியை
எதிரிகண்டான்
அது என்னுடையதென
அறிந்து கொண்டான்

இரவு திரையிட்டிருந்த
நாளொன்றில் என் தோட்டத்தில்
திருட்டு நிகழ்ந்தது.
காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன்
அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த
என் எதிரியை
0
முழு உள்ளடக்கம்

புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம்

The rapids of a Great rever
பென்குயின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை
தொகுப்பு- லஷ்மி ஹோம்ஸ்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி, கே. ஸ்ரீலதா
விலை-499.00 இந்திய ரூபாய்
ISBN- 978-0-67-008281-0

..............................................................

பாக்கு

ண்மைய ஆண்டுகளில் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழியாக்குகைகள் பலவும் வந்துகொண்டுள்ளன. இவற்றுட் குறிப்பிடத்தக்கனவான செல்வா கனகநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட Lutesong and Lament(2001) என்னும் ஈழத்தமிழர் சிறுகதை மற்றும் கவிதைகளின் தொகுப்பு ,கதாவினால் வெளியிடப்பட்ட முனைவர் கே. எஸ். சுப்பிரமணியத்தாற் தொகுக்கப்பட்ட Tamil new poetry (2005) ஆகியவற்றின் தொடர்ச்சியாகஇ உலகப் புகழ் பெற்ற பென்குயின் வெளியீட்டகம் இந்த வருடத்தின் முதல் மாதங்களில் (ஏப்பிரல் 2009) The rapids of a Great river எனும் பெயரிலான இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்க் கவிதையின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்க் கவிதையின் நெடுமரபு பற்றிய நீண்ட முன்னுரைப் பகுதியோடு காணப்படும் இந்த நெடுந்தொகை இரண்டு பகுதிகளையுடையது. முதற் பகுதி சங்கக்கவிதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சைவத்திமுறைகள், சேக்கிழார், நம்மாழ்வார், ஆண்டாள், கம்பர், சித்தர் பாடல்கள், தாயுமானவர், திரிகூடராசப்பக்கவிராஜர், கோபாலகிருஷ்ணபாரதி என்போரது எழுத்துக்களையுடையது. இரண்டாம் பகுதியில் பாரதி முதல் குட்டிரேவதி வரையான 43 கவிஞர்களது தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளையுடையது.

இத் தெர்குப்பில் பிரமள், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், எம். ஏ நுஃமான், சங்கரி, சு.வில்வரத்தினம், கி.பி அரவிந்தன், திருமாவளவன், ஊர்வசி, சோலைக்கிளி, செழியன், சேரன், மைத்திரேயி, பாலசூரியன், அவ்வை, சிவரமணி, பா.அகிலன் முதலான பதினேமு ஈழத்துக் கவிஞர்களது கவிதைகளின் மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்ப்படைப்புலகை இத்தொகுப்புக்கள் பரந்தவொரு வாசக வட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய பணியினை ஆற்றியுள்ளன. என்ற போதும் புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம் இன்னும் தமிழின் முக்கிய குரல்களைப் பதிவு செய்யாது விட்டுள்ளதெனவே தோன்றுகிறது.
0
முழு உள்ளடக்கம்

இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

சத்தியபாலன் கவிதைகள்

நிலான்

வெளிப்பாட்டு முறையில் நவீனத்துவமிக்க இன்றைய கவிதைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதையின் புரியாமை அல்லது இருண்மைத் தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும். சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப்பின் முழுமையினை எட்ட முடியும்.
தமிழிலுள்ள பழமொழிகளும் மரபுத்தொடர்களும் அவற்றின் நேரடியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுபவையல்ல. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற பழமொழி அடம்பன் கொடியயைப் பற்றியது மட்டுமல்ல. அது தரும் நேரடியான அர்த்ததிற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகின்றது. கவிதையில் சொற்கள் தாம் கொண்டிருக்கும் நியமமான கருத்திற்கப்பாலும் விரிந்;த பொருளைத் தருகின்றன. வாசிப்பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன.
ந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக் கொண்டவை. அவரது “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்”; என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதைகள்;இ கட்டுரைகள்;இ பத்திகள்;இ மொழிபெயர்ப்புக்கள் என பலதிற ஆளுமை கொண்ட படைப்பாளி. வலுமிக்க சொல்லாட்சியினாலும் சொல்லல் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலியைப் பேசுகின்றது. பல கவிதைகள் மென்னுணர்வின் முகங்களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை.
காலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அதனோடு இயைந்த எல்லாவற்றையும் தன்னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களிலிருந்தும் கவிதைகளைத் தருகின்றார்
தன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள்ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலிகளுடன் திரும்புகின்றார். போலிகளை நிஜமென நம்பி ஏமாறுகையில்இ உறவு பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறுகையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித உரையாடல்கள்இ புறக்கணிப்புக்கள்இ மீளவியலாத போரும் அது தந்த வலிகளும்இ இழப்புக்களும்இ அலைச்சல்களும்இ எதையும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவித புனைவு விம்பங்களின் பதிவாக சத்தியபாலனின் கவிதைகளுள்ளன.
சத்தியபாலனின் கவிதைகளில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல்லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களைக் ஏற்படுத்துபவை.அவர் சம காலத்தின் துயர்மிகுந்த பயணியாக இருக்கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின் மொழி அலைதலின் மொழியாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளின் வெப்பத்தில் அவரின் மனம் உருகுகின்றது. சமகால வாழ்வும் அதையொட்டிய துயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங்களும் விலக்கவியலா இருளாய்ப் படிந்துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. “காவல்இ கூத்துஇ இன்னுமொரு நாள்இ இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த காலைப் பொழுது பற்றி” போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப்புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில்த் தொனிக்கும் துயரம் நிழலாக தொடர்ந்து கொண்டிருப்பவை.
“வந்த காரியத்தை
துரிதமாய் முடித்து
பாதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன்
வீட்டையொரு காவலென நம்பி” (காவல்)

“குளித்துப் புத்தாடை அணிந்து
போய்க் கொண்டிருந்தோரின்
கவனத்துக்கு தப்பிய கால் விரல்
இறைகளுக்குள்
உலர்ந்து போயிருந்தது
இரத்தம்” (கூத்து)

“மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
பறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை என பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று” (இன்னுமொரு நாள்)

“இன்னுமொரு நாள்” என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள் அஸ்வகோஸின் “வனத்தின் அழைப்பு” தொகுப்பிலுள்ள ‘‘இருள்” என்னும் கவிதையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வகோஸ் இயல்பு குலைந்த காலத்தை
“கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன” என எழுதுகின்றார்.

இருவருமே இரத்தமும் நிணமும் மணக்கும் காலத்தின் கவிஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்த தன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவமும் கவிதையில் இ;வ் வரிகள் பெறும் பொருள் சார்ந்தஇ இடம் சார்ந்த முக்கியத்துவங்களும் வாசக மனதுக்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.
சத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங்களைத் தரிசிக்க முடிகின்றது. அவர் காட்டும் அழகியல் சொற்களின் மேல் வலிந்து பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக்கான இயல்பை மேலும் வலிமையாக்கும் முறைமை கொண்டது. ஆழகிய மனத்தின் ஒருமை குலையாத படிமப் பாங்கான தன்மை கொண்டவை. இவ்வகைக் கவிதைளில் “காடுஇ தன்னுலகு” போன்றவை முக்கியமானவை.
“பரிதி புகாத
தடிப்பினை ஊடறுத்து
அங்கங்குள்ள
இடைவெளியூடாய்
நுழையும் ஓளி விரல்கள்
பொட்டிடும் நிலத்துக்கு” (காடு)

காட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை “பரிதி புகாத தடிப்பு” எனக் காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைகளினூடு விழுந்து ஒளிரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ்வளிப்பன. “தன்னுலகு” கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொருளாழமும் படிமச் செறிவும் கொண்டது.
“தொட்டி விளிம்பு வரை நிரம்பி
ததும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறி ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
………………………………
……………………………
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிலவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்”

மேற்பார்வைக்கு தொட்டி நீர் வெப்பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போலிருந்தாலும்இ பிறரின் உன்னதத்திற்காய் தன்னையறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன்மையைக் கவிதையுணர்த்துகின்றது.
சத்தியபாலன் வாழ்க்கையை அகவெளியின் பரப்பில் காண்கின்றார். தான் கைவிடப் படும் போதும் புறக்கணக்கப்படும் போதும் ஆதரவாகத் தோள் அணைக்கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற்றங்களை கவிதைகளாக்குகின்றார்.
“திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுக்கள்
கரைந்து போயின
உள்ளீடு நாவைத் தொட்டு தன் மெய்ச்சுவை
சொல்லிற்று
எழுந்த குமட்டலில் …எதிரே
நிஜத்தின் குரூர முகம்
பழைய பசுங்கனவு சோப்பு நுரைக்
குமிழியாய்
காற்றில் மெல்ல மிதந்து போயிற்று” (தரிசனம்)

கனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ்வில்இ உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிடுபவை. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதுகின்றார்.

நம்பிக்கைகளைச் சில தடவைகள் தந்துவிடுகிற சத்தியபாலன் பல தடவைகளும் நம்பிக்கையீனங்களால் அல்லாடுகின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சமகாலம். எல்லா நம்பிக்கைகளும் உடைந்து சிதறிய பின்னர். ஏதைத்தான் பேசுவது? ஆற்றாமைகளை அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்திருக்கிறது. சக மனிதனின் துயரத்துக்காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் கவிஞனின் குரலும் விம்மலும் விசும்பலுமாகத்தான்; வெளிப்படுகின்றது. தன்கே உரியதான மொழியில் சத்தியபாலன் அரசியலைப் பேசுகின்றார்.

“சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில….
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ் சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்றியோராவது தடவையும்” (அர்த்தம்)

இந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரி முறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட இனத்தின் அரசியல் இயலாமையின் வலியையும்இ துயரையும் வெளிப்படுத்துகின்றது.

சத்தியபாலனின் கவிதை வெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் “நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும்” என்னும் கவிதையிருக்கின்றது. புதியதான புரிதலை இக்கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாக பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படுகின்றான்.

“சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன்
கல்லில் சமைந்த
முகத்தின் சலனங்கள்
வாசிப்போரற்று
வெறித்தே கிடக்கும்

வாழ்திருந்த காலத்தே
அழுந்த எழுதப்பட்ட
அவனது இருப்பு
இன்று வெறும் நினைவின் சுவடுகளாய்”;

எவராலும் கண்டு கொள்ளப்படாது. அகதி முகாங்களுக்குள்ளும் வதை முகாங்களுக்குள்ளும் அடைபட்டவர்களாய் சராசரி வாழ்வு மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின் துயத்தின் மொத்த உருவாக உறைந்த மனிதனை கவிதையில் காணமுடிகின்றது.

பலமான மொழிப் பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற் சேர்க்கையுடன் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. தானே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என சத்தியபாலன் நினைக்கின்றார். இது வாகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்கு தடையாக அமையக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன. இதனையே பின்னுரையில் பா.அகிலன் “பல இடங்களில் மௌனத்தின் பாதாளங்களைச் சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்” என்கின்றார்.

“கண்ணே உறங்கு” என்ற கவிதை நேரடித்தன்மை கொண்டதோடு. கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.

“புன்னகையின் நேசம் மெய்
உபசரிப்பின் பரிவு மெய்
பற்றிக் கொள்ளும் கையின் இறுக்கம்
உதவ முன் வரும் மனசின் தாராளம்
தலை சாய்க்கும் மடியின் இதம்
எல்லாம் உண்மை
நம்பு நம்பு”

இவ் வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின்றதே தவிர புதியதான வாசிப்பு அனுபவத்தை தருவதாக அமையவில்லை. சில கவிதைகளில் சொற்களை தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத்துப் போடுகின்றார். சொற்களுக்கிடையிலான வெளி கூடும் போது வாசிப்பு மனநிலையும் குலைந்துபோகிறது. சில வேளைகளில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. “காணல்” என்ற கவிதை முழுமையும் இவ்வகையில் அமைந்துள்ளது.

சத்தியபாலனின் “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்ற இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறையிலும் பொருளாழத்திலும் கணிப்பிற்குரியதாக இருப்பதுடன். சமகாலத்தின் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கின்றது.
0
முழு உள்ளடக்கம்

உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

ஜெயமோகன்

உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்
தாணு பிச்சையா திணை வெளியீட்டகம்.
23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில், குமரிமாவட்டம். 629001

“அறிவியல்புனைகதைகள் அறிவியலின் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும் அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் “இதெல்லாம் அறிவியல், சும்மா இரு என்று அதட்டும்.
கொஞ்சநாள் கழித்;து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வுரலாற்றுத் தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தைக் கேள்விகேட்டால் வரலாறு என்பார் என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது. இவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தைக் கற்பனை செய்கிறார்களா? இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்?
அதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச் சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளைப் பற்றி பேசும் போது கி.ராஜநாராயணன் தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக் கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத் தகவல்கள்தான் அவரது இலக்கயத்தின் தனிச்சிறப்பு என்றார். ஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. ஏதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான் தகவல்கள் இலக்கயத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா? ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத் தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத் தகவல்கள் ஆகின்றன?
எனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக் கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல் என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன?
முதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அhத்தத்தில் குயீடாக நிற்கும் போது மட்டுமே. அது இலக்கயத்தில் இயல்பாக இடம் பெறுகிறது.
ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார் பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குயீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறியீடுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை அது உருவாக்கிக் கொண்டு அதனூடாகப் பேசுகிறது.
இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குயீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்தறிங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலையம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாகிறது.
அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம். இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொண்டால் அது அவியல்புனைகதை. வுரலாற்றில் இருந்து எடுத்துக்கொண்டால் அது வரலாற்று ப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.
இவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச் சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயற்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தைப் புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கயத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே.
சங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் எனற் தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சத்திரங்கள் தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என் பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.
தமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக் கணித்து தன்னை தூய அகத்தின் குரலாக முன் வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக் கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் எனற் அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது.
ஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக் கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இ;யற்கையின் பரவசம் நோக்கத் திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுநத் நாகராஜன்.
இன்றும் இந்நிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிக எளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக் கொண்ட அந்த பறவை வண்ணத்துப் ப+ச்சி போன்ற சில கவியுருவகங்கள்.
இன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்ப+ட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளைத் திந்துவிடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனித் தொழிலாளி உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டுவந்து சேர்க்கட்டும்
சமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைததொகுதி கண்ணுக்குப்பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. போற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகு சேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது. அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்.
ஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அப+ர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.

மினுக்கம்

குச்சியைப்பிடிது;து
எழுதத்தெரியாத பிராயத்தில்
ஊதுகுழலையும்
உலைக்குறடையும்
பற்றிப்பிடிக்கவைத்த தாத்தா
காய்ச்சவும்
உருக்கவும்
மின்னூதவும் என
பொன்னைப்பழக்கியதும்
தேடத்தொடங்கிற்று
காணும் யாவினுள்ளும்
மினுக்கத்தை

என்று தன்னைப் பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப் புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளங்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.

கங்கனுள் கசடறுத்து
சுழன்றுருகும் பொன்னென
மினுங்கும் இந்த வேனற்பொழுது

என மிக இயல்பாக அந்தத் தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி, உலோகமொழி எனறு; இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.

உலோக மொழி

வெற்றிலையைக் குதப்பியபடியே
வினைபுரியும் பொன்தச்சனின்
நீட்டிய கரத்தின்
சமிக்ஞை புரியாமல்
சுத்தியல் சாமணம்
படிச்செப்பு என
எதையெதையோ
எடுததுக் கொடுத்து
தடுமாறிக் கொண்டிருந்த
காலம்
கனல் பொருதும்
பெரும்பகல்கள் பல கடந்து
எடுது;துத் தந்ததிதை

என்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்தப் பெரும் தச்சனுக்கு எடுத்துக் கொடுத்து எடுத்துக் கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லோருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.
நகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அப+ர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. முழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்துவிடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்

ஒடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப்போலுள்ள
மழைத்துளிகளை
இந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையைத் தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அப+ர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது.
இயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணததை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.
0
முழு உள்ளடக்கம்

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்

மிகச்சுருக்கமாக இலக்கியம் தொடர்பான எனது பார்வையை நிர்ணயத்துக் கொள்ள விரும்புகின்றேன். கலைகள் தமக்கான ஒரு படைப்புடலை உடையனவென்ற வகையில், சொற்களால் முடையப்பட்ட ஒரு படைப்புடலில் அல்லது சொல்லுடலில் சொற்கள் பாவிப்படிந்தவொரு நிலவுருவாக, சொற்களின் நிலப்பரப்பாக இலக்கியங்கள் காணப்படுகின்றன. அடிப்படையில் சொற்களால், ஆனால் ஒரு வகையில் சொற்களுக்கப்பால் திறக்கப்பட்ட படைப்பு வெளியில் அவை வசிக்கின்றன. சோற்கள் நடமாடும் அல்லது விநியோகக்கப்படும் முறையால் அவற்றைக் கவிதை என்றும் சிறுகதை, நாவல் என்றும் அழைக்கின்றோம். சிலவேளை இந்த வடிவ நிர்ணயங்களை ஊடத்து மேவிக்கலந்த கலப்பொருமையுடைய படைப்புடலிலும் அவை வசிக்கின்றன. எல்லையற்ற திறந்த முடிவற்ற வாசித்தலுக்காக, அர்த்தங்களை இடைவிடாது உற்பத்தி செய்து, அழத்து மீள உற்பத்தி செய்தலுக்கான சாத்தியமுடைய வெளியாக இருத்த லென்பதே இலக்கியப் படைப்பொன்றின் அடிப்படையாகும்.
இன்னும் சற்றே இதனை விரித்துப் பேசலாம். இலக்கியம் நாம் பேசும் மொழியில் இருந்துதான் உருவாகின்றது எனினும் அது அந்தப்பொது மொழிக்குள் ஒரு தனி மொழியாகும் என்பதுவே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். இலக்கியம் இந்தப் பொதுமொழிப் பிராந்தியத்தினுள் அல்லது மொழிக்கிடங்கனுள் இருந்து சொற்களை எடுது;துக் கொண்டாலும் அதனை அடுக்கும் அல்லது பின்னும் அல்லது உருக்கி வார்க்கும் முறை வேறானது. ஆகவே, அது எமது நாளாந்த பேச்சு அல்லது சொற் கோர்வை என்பற்வறில் இருந்தும், அhத்தததினை பரிமாறும் அல்லது எடுத்துக் கூறும் முறையில் இருந்தும் அதிகமதிகம் வேறுபட்டது. அடிப்படையில் அவற்றில் அர்த்தங்களும் அனுபவங்களும் அகராதிக்குள் வசிப்பதில்லை. அதனால்த்தான் புகழ்பெற்ற படைப்பாளியான ரி.எஸ்.எலியட் இலக்கிய வடிவங்களில் ஒன்றான கவிதை பற்றி எழுதும்போது கவிதையின் அர்த்தம் என்பது நாம் சொல்லும் சொற் பொருளுக்குள் வசப்படாமலே இருக்கிறது என்கிறார்.
எனவேதான் சொல்லின் நிர்ணயிக்கப்பட்ட பொருளை அறிவதால் அல்லது அகராதியில் இருந்து குறித்;த சொற்பொருளை வெளியெடுப்பதால் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்கிறார்கள்.
உண்மையில் இலக்கியம் அகராதியில் பதிக்கப்பட்டுள்ள நிர்ணயகரமான அர்த்தங்கள் மீதான சவாலாகவே அடிப்படையில் காணப்படுகன்து. அது முடிந்த முடிவான அர்த்தங்களைக் குலைப்பதாயும் மாற்றி அமைப்பதாயும் புதிது புனைவதாயும் காணப்படுகின்றது. அவை அர்த்தங்களின் பல்லடுக்காய் காணப்படுகின்றன. அதனால்த்தான் புகழ்பெற்ற இன்னொரு கவிஞரான ஆற்றூர் ரவிவர்மா இலக்கியப் படைப்புக்கள் மொழியின் எல்லைகளை எல்லையினறி; அதிகரிப்பதாகக் கூறுகிறார்.
வேறொரு விதமாகக் கூறினால், குறிப்பீட்டின் (அர்த்தம்) உறை நிலையை உடைத்து, முடிவற்ற அர்த்தங்களின் உபத்திக்கான வாயில்களை முடிவின்த் திறந்து செல்லும் உயிராற்றலே இலக்கியததின் அடிப்படையாகின்றது. இந்தச் சுட்டுப் பொருளின் முடிவற்ற பயணங்களிற்கான சாத்தியமே இலக்கயச் சொற்களின் அடிப்படையாகும். அது ஒருவகையில் சொற்களின் பொருள் தொக்கு (உழnயெவயவழைn) நிலையாகும்.
இது சொற்களின் நேர்பொருள் (னநழெவயவழைn) அல்லது அபிதாவிலிருந்து கிளைத்தாலும் அது சொல்லின் பொருள்கோடு நிலையின் மிகமிக ஆரம்பப் புள்ளி மட்டுமே. அதனால்த்தான் சமகாலத் தமிழின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜெயமோகன் மனத்தின் ஒரு பகுதி எழுத்தினைப்படித்தபடி செல்ல மனத்தின் வேறொரு பகுதி புழக்க மொழிக்கு அப்பால் மறை முகமாக இயங்கும் வேறொரு மொழியைப் படித்துச் செல்கிறது என்ற சாரப்பட எழுதுகிறார்.
இந்தப் பின்னணியில் இருந்து சமஸ்கிருத அழகியலாளர்களுள் ஒருவரான ஆனந்தவர்த்தனர் சொற்களின் இந்த மேலுந்துகை நிலை அல்லது அதன் பொதுத் தோற்றத்;திற்கு அப்பாலேயே இலக்கிய மொழியின் அடித்தளம் இருப்பதாக இனங்காண்கிறார். அதனை ‘த்வனி’ எனப் பெயரிடும் அவர், காவியத்தின் ஆன்மா த்வனியே என்று பிரகடனம் செய்கிறார். இந்தத் தொக்கு பொருள் அல்லது புழக்கமொழிக்கு அப்பால் அதிலிருந்து செட்டை விரிக்கும் பொருள்கள் அவற்றிற்கேயான அகவயத்தர்க்கங்களை உடையன. இவற்றை அழகியற் தர்க்கம் அல்லது கவித்துவத்தர்க்கம் என அழைக்க விரும்புகின்றேன். இவை அடிப்படையில் அதர்க்கங்களின் தர்க்கமாக உள்ளன. புpரியத்திற்குரிய நண்பன் அகிலன் எழுதியது போல இலக்கியங்கள் சொல்லால் சொல் ‘களை’யும் ஒருவகை வித்தையாக உள்ளன
0
முழு உள்ளடக்கம்

வாழக்கொடுத்த வழி

சி.ஜெயசங்கர்

எழுத முடியாத கவிதைகள்
இரைந்தெழுந்த பேரலைகள்
நெஞ்சக் கனகடலில் சுழன்டிக்க

முகங்கள் சலனமற்றுச் சாந்தமாய்
கண்கள் சிவப்பேறாப் பளிங்குகளாய்
வார்த்தைகள் கொதிப்பற்று
துயரற்று
எதுவுமே அற்று

அசாதாரணங்களை உள்ளமிழ்த்தி
சாதாரணமாய்
வெகு சாதாரணமாய்
பொய்யுக்கும் புரட்டுக்கும்
தாளமிட்டு வாழக்கொடுத்த வழி
என்செய்வோம் சொல்
0
முழு உள்ளடக்கம்